எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

அவெனிஸ் 125 (Suzuki Avenis 125) ஸ்கூட்டர் மாடலில் ஏற்கனவே இரு தேர்வுகள் விற்பனைக்குக் கிடைத்து வரும் புதிதாக குறைந்த விலை தேர்வை சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களில் அவெனிஸ் (Avenis)-ம் ஒன்று. இது இரு விதமான தேர்வுகளில் மட்டுமே நாட்டிவில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. அவெனிஸ் ரைட் கன்னெக்ட் எடிசன் (Avenis Ride Connect Edition) மற்றும் அவெனிஸ் ரேஸ் எடிசன் (Avenis Race Edition) ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

இவ்விரு தேர்வுகளின் வரிசையிலேயே சுஸுகி நிறுவனம் புதிய ஓர் தேர்வை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த தேர்வு அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிசன் (Avenis Standard Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இப்புதிய தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 90,735 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதேநேரத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரைட் கன்னெக்ட் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் ஆகியவற்றைக் காட்டிலும் இது சற்று குறைவான விலையாக காட்சியளிக்கின்றது. ரைட் கன்னெக்ட் எடிசன் ரூ. 92,235 என்கிற விலையிலும், ரேஸ் எடிசன் ரூ. 92,536 என்ற விலைக்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

இவ்விரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகளே என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்டாண்டர்டு எடிசன் அவெனிஸ் ஸ்கூட்டரிலும் எரிபொருள் நிரப்பும் வாய் பகுதி வெளிப்புறத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை விட்டு கீழே இறங்காமலேயே எரிபொருளை சுலபமாக நிரப்ப உதவும்.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

இதுமட்டுமின்றி, இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜ் வசதியும், மோட்டார்சைக்கிள் ஸ்டைலிலான இன்டிகேட்டர்கள் பின் பக்கத்திலும், எல்இடி ஹெட்லேம்பும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் -பன்முக நிற தேர்வு வசதியும் வழங்கப்படுகின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே / மெட்டாலிக் லஷ் கிரீன் (Metallic Matte Fibroin Grey / Metallic Lush Green), பியர்ல் பிளேஸ் ஆரஞ்சு / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் (Pearl Blaze Orange / Glass Sparkle Black), மெட்டாலிக் மேட் பிளாக் / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் (Metallic Matte Black / Glass Sparkle Black) மற்றும் பியர்ல் மிராஜ் வெள்ளை / மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே (Pearl Mirage White / Metallic Matte Fibroin Grey) ஆகிய நான்கு விதமான நிற தேர்வுகளிலேயே அவெனிஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

நிற தேர்வு மற்றும் அலங்கார விஷயத்தில் மட்டுமே பிற தேர்வுகளுடன் ஸ்டாண்டர்டு எடிசன் அவெனிஸ் வித்தியாசம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. எஞ்ஜின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. இதில், 125 சிசி ஃப்யூவல் இன்ஜெக்டட் அம்சம் கொண்ட ஏல் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரை 6,750 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. ஸ்மூத்தான இயக்கத்திற்காக இந்த ஸ்கூட்டரில் சிவிடி தானியங்கி டிரான்ஸ்மிஷனை சுஸுகி பயன்படுத்தியிருக்கின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

அவெனிஸ் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடையே 106 கிலோவாகும். இதன் வருகை இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் என்டார்க் 125, அப்ரில்லா எஸ்ஆர் 125, ஹோண்டா கிரேஸியா 125 மற்றும் யமஹா ரே இசட்ஆர் உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... குறைவான விலையில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய சுஸுகி... இனி 3 ஆப்ஷன்களில் அவெனிஸ் 125!

அவெனிஸ் 125 ஸ்கூட்டர் பெற்றிருக்கும் அம்சங்கள் சில மோட்டார்சைக்கிள்களில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. ஸ்பிளிட் ரக கிராப் ரெயில், ஸ்போர்ட்டி தோற்றத்திலான மஃப்ளர் மற்றும் பாடி கிராஃபிக்குகளுடன் அது அலங்கரிக்கப்பட்டுல்ளது. இத்துடன், ஸ்பீடி தோற்றம் கொண்ட அலாய் வீல்களும் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: முதல் 5 படங்களே புதிய அவெனிஸ் 125 ஸ்டாண்டர்டு எடிசன் தேர்வின் படங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 16:16 [IST]
English summary
Suzuki Launches avenis 125 standard edition at rs 90735
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+