இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் குருக்ராம் தொழிற்சாலையில் இருந்து 6 மில்லியனாவது வாகனத்தை முழுவதுமாக தயாரித்து வெளியேற்றியுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) நிறுவனம் ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குருக்ராம் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் உள்நாட்டிற்கு தேவையான மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களை சுஸுகி தயாரிக்கிறது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

இத்தகைய இந்தியாவின் ஒரே சுஸுகி மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையில் இருந்து 6 மில்லியனாவது இருசக்கர வாகனம் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது 60ஆம் லட்சமாவது சுஸுகி வாகனம். சுஸுகியின் குருக்ராம் தொழிற்சாலையில் 6 மில்லியனாவது வாகனமாக வெளியேற்றப்பட்டிருப்பது அவெனிஸ் 125சிசி ஸ்கூட்டராகும்.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

புத்தம் புதிய சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டர் சமீபத்தில், கடந்த ஆண்டின் இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். பர்க்மேன் ஸ்ட்ரீட்125 ஸ்கூட்டருடன் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் இணைந்துள்ள அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.86,700 ஆக உள்ளது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

வெற்றிக்கரமாக 6 மில்லியனாவது வாகனம் வெளியேற்றப்படுவது சுஸுகியின் தொழிற்சாலையில் ஓர் சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சடோஷி உச்சிடா, "இந்த ஆண்டுடன் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்திய நாட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

எங்கள் குருக்ராம் ஆலையில் இருந்து இந்தியாவில் 6 மில்லியன் சுஸுகி இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன என்பதை அறிவிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் பிராண்டின்மீது அவர்கள் காட்டிய நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உறுதிச்செய்யும் வகையில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் எங்கல் டீலர் பார்ட்னர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த மைல்கற்கள் அனைத்தும் சுஸுகி இருசக்கர வாகனங்கள் என்ற பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நீண்டகால நம்பிக்கையை தக்கவைக்க எங்களுக்கு உதவுகிறது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

இந்த 6 மில்லியன் மைல்கல் இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த மதிப்பை வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்பணிப்புக்கு ஓர் சான்றாகும். கொரோனா இரண்டாவது அலை மற்றும் உலகளாவிய குறைக்கடத்திகள் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இருந்தப்போதிலும் இந்த அடையாளத்தை எட்ட முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

சுஸுகியின் குருக்ராம் தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 7.5 லட்ச இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் திறனுடன் உள்ளது. குருக்ராமில் மொத்தம் 37 ஏக்கர் பரப்பளவில் SMIPL எனப்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதில் வெறும் 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தற்போதைக்கு தொழிற்சாலையினை இந்த நிறுவனம் கட்டமைத்துள்ளது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

மீதி நிலப்பரப்பு எதிர்கால திட்டங்களுக்காகவும், மேம்பாட்டு பணிகளுக்காகவும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏகப்பட்ட அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களையும் மற்றும் ஸ்கூட்டர்களையும் சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அதேநேரம் பிரீமியம் தரத்திலான, விலையுயர்ந்த 2-வீலர்ஸும் இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிரபலமான சுஸுகி இருசக்கர வாகனங்கள் என்று பார்த்தால், ஆக்ஸஸ் 125, ஜிக்ஸெர் & ஜிக்ஸெர் எஸ்.எஃப் உள்ளிட்டவற்றை சொல்லலாம். சமீபத்தில் புதிய 125சிசி ஸ்கூட்டராக அவெனிஸை அறிமுகப்படுத்துவதற்கு முன் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் ஹயபுஸா சூப்பர்பைக்கை புதிய தலைமுறையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்தியாவில் 2-வீலர்ஸ் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்ட சுஸுகி!! வெறும் 15 ஆண்டுகளில் இப்படியொரு சாதனையா!

6 மில்லியனாவது வாகனமாக சுஸுகி தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள அவெனிஸ் 125 ஸ்கூட்டரானது இந்தியாவில் ஹோண்டா டியோவிற்கு கிடைத்துவரும் வரவேற்பினை காலி செய்யும் விதமாக களமிறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டருக்கும் போட்டியாக விளங்குகின்ற இது ரைடு கனெக்ட் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் என்கிற இரு விதமான வெர்சன்களில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycle Rolls Out 6 Millionth Vehicle From Gurugram Plant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X