விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்! இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle India) நிறுவனம் விரைவில் கடானா (Katana) எனும் புதுமுக பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle India) இந்தியாவில் வெகு விரைவில் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோ ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

நிறுவனம் கடானா (Katana) எனும் புதுமுக மோட்டார்சைக்கிளையே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கை நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதே பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் சுஸுகி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

சுஸுகி கடானா ஓர் லிட்டர் கிளாஸ் நியோ-ரெட்ரோ நேக்கட் ரக மோட்டார்சைக்கிளாகும். இந்த பைக் இந்தியாவிற்கு வேண்டுமானால் புதுமுக வாகனமாக இருக்கலாம், ஆனால், இதனை ஏற்கனவே உலக சந்தைக்கு இது ஏற்கனவே பழக்கப்பட்ட வாகனமாகும். ஆம், இந்த பைக்கை சுஸுகி நிறுவனம் ஏற்கனவே உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் வெகுவிரைவில் அதன் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கின்றது, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இந்தியாவின் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 தர சான்றுடன் இப்பைக் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, இந்த இருசக்கர வாகனத்தில் 999 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இந்த மோட்டார்சைக்கிளில் ரைடு-பை-ஒயர் த்ரோட்டில் மற்றும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர 5 ஸ்டெப் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் லோவ் ஆர்பிஎம் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களு்ம கடானா பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

மேலும், அப்சைடு டவுன் ஃபோர்க், 17 அங்குல வீல்கள், 120 மிமீ அகலமான டயர் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 160 செக்சன் டயரும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க உதவும். இதுதவிர, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ப்ரெம்போ கேலிபர்கள், முன் பக்கத்தில் இரு டிஸ்க்கும், பின் பக்கத்தில் ஒற்றை டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இந்த பைக்கை சுஸுகி நிறுவனம் சிபியூ வாயிலாக விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. அதாவது, முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்து அதனை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது சுஸுகி. இருசக்கர வாகனத்திற்கு விலை எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படவில்லை.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிள் 14 லட்ச ரூபாய் தொடங்கி 15 லட்ச ரூபாய் வரையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் மற்றும் கவாஸாகி நிஞ்ஜா 1000 எஸ்எக்ஸ் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக கோதாவில் களமிறங்க இருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

மிகவும் சூப்பரான நியோ-ரெட்ரோ டிசைன் கொண்ட வாகனமாக சுஸுகி கடானா உள்ளது. மிகவும் சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலும் இப்பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிச்சயம் இந்த பைக் இந்தியர்களைக் கவரும் என சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது சுஸுகி கடானா பைக்... இது எவ்ளோ சூப்பரான பைக் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இப்பைக்கை நிறுவனம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 28, 2022, 19:30 [IST]
English summary
Suzuki motorcycle india reveals teaser video for katana here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+