Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் 250 (Suzuki V-Strom SX250) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 எனும் புதுமுக பைக்கை இந்தியாவில் விற்பனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் 250 சிசி திறன் கொண்ட அட்வென்சர் ரக பைக்காகும். இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 2.11 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

சுஸுகி நிறுவனம் இந்த பைக் மாடலை சர்வதேச சந்தையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. வி-ஸ்ட்ரோம் 250 மட்டுமின்றி வி-ஸ்ட்ரோம் 650, வி-ஸ்ட்ரோம் 1000 மற்றும் வி-ஸ்ட்ரோம் 1050 ஆகிய தேர்வுகளிலும் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இதில், இந்தியாவில் சுஸுகி நிறுவனம் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி எனும் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது. இதன் விலை பல மடங்கு அதிகம் ஆகும். எனவேதான் தற்போது இதன் விலை குறைவான வெர்ஷனாக வி-ஸ்ட்ரோம் 250 நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

ஜிக்ஸெர் 250 மற்றும் எஸ்எஃப் 250 ஆகிய புகழ் பெற்ற பைக் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 249 சிசி எஞ்ஜினே தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வி-ஸ்ட்ரோம் 250 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 9300 ஆர்பிஎம்மில் 26.5 பிஎஸ் பவரையும், 7300 ஆர்பிஎம்மில் 22.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும். இதன் திறன் வெளிப்பாடு அதிக பவர் கொண்ட அட்வென்சர் பைக்கிற்கு இணையானதாக இருக்கும் சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. திறன் வெளிப்பாட்டில் மட்டுமில்லைங்க சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகளிலும் இந்த பைக் மிக சூப்பரானதாக காட்சியளிக்கின்றது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 பைக்கில் பன்முக நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பைக்கை அனைத்து சாலைகளிலும் இயங்கக் கூடிய வாகனமாக சுஸுகி உருவாக்கியிருக்கின்றது. அதாவது, கரடு-முரடான மற்றும் அதிக சகதியான பாதைகளை கூட எளிதில் சமாளிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இத்துடன் மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு லாங்காக மேற்கொள்ளப்படும் பயணங்கள் சுவாரஷ்யமானதாக அமைய வேண்டும் என்பதற்காக அதிக மிருதுவான இருக்கை அமைப்பு, சிறந்த ஹேண்ட்லிங் அம்சங்கள் உள்ளிட்டவை வி-ஸ்ட்ரோம் 250 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இதுமட்டுமின்றி பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி ஹெட்லேம்ப், உயரமான விண்ட் ஸ்கிரீன்,க்னக்கிள் குவார்ட், சிக்னேச்சர் ஏடிவி பீக், ஸ்போர்டி தோற்றத்திலான ரியர் வியூ மிர்ரர், ஸ்கல்ப்டட் ஃப்யூவல் டேங்க் ஸ்பிளிட் ரக இருக்கைகள் மற்றும் அப்ஸ்வெப்ட் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வி-ஸ்ட்ரோம் 250 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சுஸுகி ரைடு கன்னெக்ட் ஆப் வாயிலாக இணைத்துக் கொள்ள முடியும். மேலும், யுஎஸ்பி சார்ஜர் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஸ்விங்கர்ம் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழக்கமான அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Suzuki V-Strom SX 250சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசப்படுவீங்க!

இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. மூன்று விதமான நிற தேர்வுகளில் இப்பைக்கை இந்தியாவில் வாங்க முடியும். மஞ்சள், ஆரஞ்சு மற்றும் கருப்பு ஆகிய நிற தேர்வுகளிலேயே அப்பைக் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2022, 17:34 [IST]
English summary
Suzuki v strom sx bike launched in india at inr 2 11 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+