தேவப்படலனா மடிச்சு ஒரு ஓரமா வச்சிடலாம்! அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

ஸ்விட்ச் பைக் (Svitch Bike) நிறுவனம் அதன் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட லைட் எக்ஸ்இ (Lite XE) எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

உள்நாட்டு மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்விட்ச் பைக் (Svitch Bike) நிறுவனம், அதன் புதுமுக சொகுசு எலெக்ட்ரிக் சைக்கிள் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நாட்டில் அனைத்து ரக மின்சார வாகங்களுக்கும் வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், இ-சைக்கிள்களுக்கும் டிமாண்ட் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

இந்த நிலையிலேயே லைட் எக்ஸ்இ (Lite XE) எனும் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிளை ஸ்விட்ச் பைக் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 74,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அதிகபட்ச விலைக்கு அதிக சிறப்பம்சங்கள் இ-சைக்கிளில் வழங்கப்பட்டதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

லைட் எக்ஸ்இ ஓர் ஸ்மார்ட் ரக இ-சைக்கிள் ஆகும். இதில், 36V, 10.4AH பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 80 கிமீ ரேஞ்ஜ் தரும். இதுமட்டுமின்றி, இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை தங்கிய வாகனமாக லைட் எக்ஸ்இ காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 7 ஸ்பீடு ஷிமனோ கியர், எல்சிடி டிஜிட்டல் திரை, 5 பெடல் அசிஸ்ட் சிஸ்டம் மோட்கள் மற்றும் டெயில் லைட்டுகள் இ-சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

இதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் மிதிவண்டியில் அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பார், சீட் பார் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏர்கிராஃப்ட்களில் பயன்படுத்தப்படும் 6061 அலுமினியம் ஃப்ரேம்களைக் கொண்டு நிறுவனம் இ-சைக்கிளை உருவாக்கியிருக்கின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

இந்த அலுமினியம் எடைக் குறைவானது மற்றும் மிக எடைக் குறைவானதும்கூட. இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே லைட் எக்ஸ்இ விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த மாதிரியான பிரத்யேக அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே மிக அதிக விலைக் கொண்டதாக லைட் எக்ஸ்இ காட்சியளிக்கின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

இ-சைக்கிளில் ஸ்விட்ச் நிறுவனம் 36V, 250W மின்சார மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பன்முக நிற தேர்வுகளிலும் இந்த இ-சைக்கிளை ஸ்விட்ச் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அந்தவகையில், ஸ்கார்லட் ரெட், மிட்நைட் சஃபையர், யங்கீ யெல்லோ, கோப்லின் கிரீன் மற்றும் பெர்லின் கிரே உள்ளிட்ட ஐந்து விதமான நிற தேர்வுகளிலேயே எலெக்ட்ரிக் சைக்கிளை நிறுவனம் விற்பனைக்கு வழங்க உள்ளது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

எலெக்ட்ரிக் சைக்கிளுக்கான புக்கிங் பணிகள் தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இ-சைக்கிளின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இதை தேவைப்படாத நேரங்களில் மடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, இ-சைக்கிளை ஃபோல்ட் செய்யும் அம்சத்துடனேயே ஸ்விட்ச் உருவாக்கியிருக்கின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

ஏற்கனவே நிறுவனம் எக்ஸ்இ பிளஸ், எக்ஸ்இ, எம்எக்ஸ்இ, என்எக்ஸ்இ ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடனேயே புதிதாக ஐந்தாவது மின்சார தயாரிப்பாக லைட் எக்ஸ்இ இணைக்கப்பட்டுள்ளது. பிற தயாரிப்புகளைப் போலவே இந்த பிரீமியம் இ-சைக்கிளுக்கும் நல்ல வரவேற்பு மின்வாகன பிரியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேவப்படலனா மடிச்சு ஓரமா வச்சிக்கலாம்... அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பாருடன் லைட் எக்ஸ்இ எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

நிறுவனம் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் சைக்கிள் பிரியர்களைக் கவரும் பொருட்டே அதன் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகின்றது. குறிப்பாக, அவற்றில் தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மடக்கிக் கொள்ளும் அம்சத்துடன் லைட் எக்ஸ்இ இ-சைக்கிள் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2022, 15:39 [IST]
English summary
Svitch launches lite xe e cycle in india at rs 74999
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+