அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நமது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி மோட்டார்சைக்கிளில் சுமார் 18,000கிமீ பயணம் செய்து மலைக்க வைத்துள்ளனர். யார் இந்த தம்பதி என்பது குறித்தும், இந்த பயணத்திற்காக இவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் குறித்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

லோக்கல் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் ‘டிரைவ் அவே ப்ரஸ்ட் கேன்சர்' என்ற பெயரில் விழிப்புணர்வு பயணத்தை சில மாதங்களுக்கு முன் துவங்கி வைத்தது. இந்த பயணத்தை தமிழ்நாட்டில் வசிக்கும் லோகேஷ்வரி மற்றும் அவரது கணவர் பிரேயம் பேகன் தம்பதியினர் முன் நின்று நடத்தி முடித்துள்ளனர்.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

பிரேயம் பேகன் - லோகேஷ்வரி தமைமை வகிக்க, மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் பலர் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி துவங்கிய இந்த பயணம் சுமார் 18,000கிமீ-க்கு இந்தியா மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளை கடந்து கிட்டத்தட்ட 120 நாட்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் நிறைவுற்றுள்ளது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

உலகம் முழுவதிலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டே, இந்த 18,000கிமீ தொலைவு பயணத்தை இந்த அக்டோபர் மாதத்திற்கு உள்ளாக நிறைவு செய்ய திட்டமிட்டு, நடத்தி முடித்துள்ளனர். இந்தியா மற்றும் நேபாளத்தில் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான புரிதல்களையும், இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறுவதே ஆகும். இந்த பயணத்தில் பிரேயம் பேகன் & லோகேஷ்வரி தம்பதியினர் உடன் 42 ரைடர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர் 42 பேரும் சென்னை ராயல் ரைடர்ஸ் மோட்டார்சைக்கிள் க்ளப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

இதில், தலைமை தாங்கி நடத்தி சென்ற தம்பதியினர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை இந்த பயணத்தில் பயன்படுத்தியுள்ளனர். ராயல் என்பீல்டின் எந்தவொரு சாலைக்குமான ஹிமாலயன் முதன்முறையாக 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்களில் சில முறை ஹிமாலயன் பைக் பல்வேறு விதங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

சந்தையில் ஸ்டாண்டர்ட், ட்யூவல்-டோன் மற்றும் பைன் க்ரீன்/கிரானைட் கருப்பு என 3 விதமான வேரியண்ட்களில் ஹிமாலயன் பைக் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஹிமாலயன் பைக்கில் 411சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 24.5 எச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயனில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு 200மிமீ டிராவல் உடன் 41மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 180மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்காக ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ்-உம் இந்த ராயல் என்பீல்டு பைக்கில் கொடுக்கப்படுகிறது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

ஹிமாலயனில் ட்யூப்டு டயர்களே பொருத்தப்படுகின்றன, ட்யூப்லெஸ் அல்ல. அதேபோல் சக்கரங்களும் ஸ்போக் சக்கரங்களாகவே உள்ளன. ஒட்டுமொத்த தோற்றத்தை பார்த்தோமேயானால், மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் மிக உயரமானது ஹிமாலயன் பைக் ஆகும். கிட்டத்தட்ட 1,370மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் ஹிமாலயனின் நீளம் 2,190மிமீ மற்றும் அகலம் 840மிமீ ஆகும்.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

தரையில் இருந்து பைக்கின் இருக்கை ஆனது 800மிமீ உயரத்தில் உள்ளது. முன் மற்றும் பின் இருக்கைக்கு இடையேயான தூரம் 1,465மிமீ ஆகும். தரையில் இருந்து பைக்கின் அடிப்பக்கம் ஆனது 220மிமீ உயரத்தில் உள்ளது. முழு பெட்ரோல் உடன் பைக்கின் எடை ஏறக்குறைய 200 கிலோ. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கிற்கு நிலையாக 30,000கிமீ/ 3 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

ஹிமாலயன், ராயல் என்பீல்டின் தற்கால மாடர்ன் மோட்டார்சைக்கிளாகும். ஆனால் இந்த நிறுவனத்தின் அடையாளம் என்று பார்த்தால், அது புல்லட் பைக்குகளே. முந்தைய காலங்களில் வெவ்வேறான சிசி-களில் புல்லட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், தற்சமயம் 350சிசி என்ஜின் உடன் மட்டுமே புல்லட் மாடல் சந்தைப்படுத்தப்படுகிறது.

அசாத்தியமான பைக் பயணத்தை முடித்து காட்டிய நம்ம ஊர் தம்பதி!! இப்படியொரு பாராட்டத்தக்க விஷயத்திற்காகவா...

ட்ரிப்பர் நாவிகேஷன் உடன் ஹிமாலயன் பைக் கடந்த 2021இல் அப்டேட் செய்யப்பட்டது. இதேபோன்று புல்லட் 350 பைக்கும் விரைவில் அப்கிரேடை பெறவுள்ளது. ஆனால் இம்முறை புல்லட் 350 பைக்கின் தோற்றம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புல்லட் 350 பைக் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்டு நீண்ட வருடங்களாகிவிட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, October 28, 2022, 11:59 [IST]
English summary
Tamil nadu couple travelled 18 000 km on re himalayan for breast cancer awareness
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+