அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் பைக்குகளை அப்டேட் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கூட புதிய தலைமுறை பல்சர் 125 பைக் ஒன்று புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

டிசைன் & ஸ்டைல்

புதிய பல்சர் 125-இன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பைக் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நம்மால் புதிய பல்சர் 125 பைக்கின் ஹெட்லேம்ப் அமைப்பு, சிறிய அளவிலான விஸர், ஸ்போர்டியான நீட்டிப்புகளுடன் அகலமான பெட்ரோல் டேங்க், நேர்த்தியான ஸ்லம்ப் பாதுகாப்பான், ஒற்றை-துண்டு இருக்கை, நேர்த்தியான பின் இறுதிமுனை மற்றும் ஒற்றை-துண்டு பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான கம்பி உள்ளிட்டவை புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

சேசிஸ்

புதிய பல்சர் 125 பைக் முற்றிலும் புதிய இயக்குத்தளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் இதே இயக்குத்தளத்தின் அடிப்படையில்தான் இனி வெளிவரவுள்ள புதிய தலைமுறை பல்சர் மாடல்களும் வடிவமைக்கப்பட உள்ளன.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

மற்றப்படி இந்த புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் பைக்கில் எத்தகைய இயந்திர பாகங்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்குமே தொடரப்படும்.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

தொழிற்நுட்ப அம்சங்கள்

புதிய தலைமுறை பல்சர் 125 பைக்கில் எல்இடி டிஆர்எல்-கள் உடன் பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் & எல்இடி டெயில்லேம்ப் வழங்கப்பட உள்ளன. ஹேண்டில்பார் ஒற்றை-துண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் க்ளிப்-ஆன் அம்சத்துடன் இருக்காது.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

இருப்பினும் பல்சர் 250 இரட்டை பைக்குகளில் உள்ளதை போல் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதிய பல்சர் 125-இல் கொடுக்கப்படலாம். அதேபோல் பைக்கின் ஸ்விட்ச் கியரையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதியதாக வழங்க பார்க்கும். இது நிச்சயமாக தற்போதைய மாடலில் உள்ளதை காட்டிலும் சிறப்பானதாக இருக்கும்.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

என்ஜின் அமைப்பு

புனேவில் அடையாளம் காணப்பட்டிருந்த பல்சர் 125-இன் சோதனை மாதிரியில் காற்று-குளிர்விப்பான் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்ததுபோல் தெரிந்தது. பல்சர் 125 & என்எஸ்125 என இரண்டிலும் தற்போதைக்கு 125சிசி காற்று-குளிர்விப்பான் என்ஜினே பொருத்தப்படுகின்றன. இந்த என்ஜின் பல்சர் 125 பைக்கில் அதிகப்பட்சமாக 11.8 பிஎஸ் மற்றும் 10.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

அதுவே பல்சர் என்எஸ்125 பைக்கில் 11.99 பிஎஸ் மற்றும் 11 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இவை இரண்டிலும் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய தலைமுறை பல்சர் 125 பைக்கிலும் இதே என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளே கொடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

அறிமுக தேதி

புதிய-தலைமுறை பஜாஜ் பல்சர் 125 பைக் இந்திய சந்தையில் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இதன் சமீபத்திய சோதனை மாதிரி ஆனது கிட்டத்தட்ட அனைத்து வடிவமைப்பு பணிகளையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளித்தது.

அடுத்த தலைமுறை பல்சர் 125 பைக்கில் புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விரிவாக இதோ...!!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ சமீபத்தில்தான் அதன் எதிர்கால தயாரிப்புகளுக்காக பல்சர் எலான் மற்றும் பல்சர் எலிகன்ஸ் என்கிற இரு பெயர்களை பதிவு செய்து கொண்டது. இவை புதிய தலைமுறை பல்சர் பைக்குகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

Most Read Articles
English summary
Things we expect from next gen bajaj pulsar 125
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X