இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் 500சிசி-க்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட பைக்குகளுக்கான சந்தை மிக நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி+ மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

இந்திய சந்தையில் 500சிசி-க்கும் அதிக சிசி கொண்ட பைக்குகளை விற்பனை செய்வதில் ராயல் என்பீல்டு மற்ற அனைத்து பிராண்ட்களை காட்டிலும் மிக பெரிய வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த பிரிவில் மொத்தம் 2,745 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

இதில் சுமார் 89.95% ராயல் என்பீல்டின் 650சிசி இரட்டை பைக்குகளுடையது ஆகும். அதாவது கடந்த மாதத்தில் 2,469 650சிசி ட்வின்ஸ் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் சுமார் 769.37% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 284 650-ட்வின்ஸ் (இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650) பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

இவ்வாறு ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை குறைந்திருப்பதினால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மொத்த 500சிசி+ மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் வெறும் 573 யூனிட்களாக பதிவாகியிருந்தது. இந்த மொத்த விற்பனை எண்ணிக்கை ஆனது கடந்த 2022 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் கிட்டத்தட்ட 379.06% குறைவாகும். ராயல் என்பீல்டு ட்வின்ஸிற்கு அடுத்து டிரையம்ப் டைகர் 900 என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

ஏற்கனவே கூறியதுதான், ராயல் என்பீல்டு ட்வின்ஸ் பைக்குகளே இந்த பிரிவில் தங்களது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றன. இவற்றிற்கு அடுத்துள்ளவை 50 யூனிட்கள் கூட விற்பனை செய்யப்படுபவையாக இல்லை. 2வது இடத்தில் உள்ள டிரையம்ப் டைகர் 900-இன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை வெறும் 30 ஆகும். அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த டிரையம்ப் அட்வென்ச்சர் பைக் 39 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

இந்த வகையில் டைகர் 900-இன் விற்பனை 23.08% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. கவாஸாகி இசட்900 28 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. ஆனால் இதன் விற்பனை, 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் டபுள் மடங்கு அதிகமாக 61 யூனிட்களாக இருந்தது. இதற்கடுத்து 4வது இடத்தை கவாஸாகியின் 1000சிசி பைக்கான நிஞ்சா1000 அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

கடந்த பிப்ரவரியில் இந்த 1000சிசி பைக் மொத்தம் 24 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2021 பிப்ரவரியில் இந்த 1000சிசி பைக் 8 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது. டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை 21 யூனிட்களின் விற்பனை உடன் பெற்றுள்ளது. இது இந்த டிரையம்ப் பைக்கின் 2021 பிப்ரவரி மாத விற்பனையை காட்டிலும் 600% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 3 ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

2021 பிப்ரவரியில் 48 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த கவாஸாகி நிஞ்சா 650 கடந்த மாதத்தில் 20 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த வரிசையில் 6வது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. இதற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் மற்றொரு ஜப்பானிய ஸ்போர்ட்ஸ் பைக்கான ஹோண்டா சிபிஆர்650 கடந்த மாதத்தில் 19 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கவாஸாகி நிஞ்சா 650-ஐ காட்டிலும் வெறும் 1 யூனிட் மட்டுமே குறைவாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

ட்ரையம்ப் ட்ரைடெண்ட் பைக்குகள் கடந்த மாதத்தில் 17 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ட்ரைடெண்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டைகர் 660 பைக் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் இந்திய சந்தையில் தங்களது பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை 500சிசி+ பைக் எது தெரியுமா? நம்பர்.1 இடத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்

ட்ரைடெண்ட்டிற்கு அடுத்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் அட்வென்ச்சர் பைக்கான வி-ஸ்ட்ரோமை கடந்த மாதத்தில் 12 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த சுஸுகி அட்வென்ச்சர் பைக் வெறும் 1 யூனிட் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. இதேபோல் சூப்பர் பைக்கான ஹயபுஸாவையும் சுஸுகி நிறுவனம் கடந்த மாதத்தில் 12 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 22, 2022, 11:41 [IST]
English summary
Top 10 500cc plus motorcycles feb 2022 re 650 twins dominate
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+