இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இந்தியாவில் குறைந்த விலை கொண்ட பைக்குகளுக்கே எப்போதும் மார்க்கெட் இருக்கும் என்றாலும், அதிக சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2022 மார்ச் மாதத்தில் விற்கப்பட்ட 500சிசி+ பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

500க்கும் அதிகமான சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்கள் கடந்த மார்ச்சில் மொத்தமாக 1,619 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆனது 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் சுமார் 164.54% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 612 500சிசி+ மோட்டார்சைக்கிள்களே விற்கப்பட்டு இருந்தன.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

500சிசி-க்கு மேலான என்ஜின் கொண்ட பைக்குகளில் அதிகம் விற்பனையாகுபவை என்றால், அவை ராயல் என்பீல்டின் 650சிசி இரட்டை பைக்குகள் தான். ஏனெனில் இவை செயல்திறன்மிக்கவைகளாக இருக்கும் அதேநேரம் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனாலேயே மொத்த விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 1,226 யூனிட்கள், அதாவது 75.73% ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகள் உடையதாகும்.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

ஆனால் கடந்த ஆண்டு மார்ச்சில் வெறும் 378 ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த 650சிசி பைக்குகளின் விற்பனை 224.34% அதிகரித்துள்ளது. ராயல் என்பீல்டின் 650 இரட்டை பைக்குகளில், இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 என்ற இரு மாடல்கள் அடங்குகின்றன.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவை அனைத்தும் 100 யூனிட்களுக்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே மாதந்தோறும் விற்பனையாகுபவை ஆகும். 2வது இடத்தில் கவாஸாகியின் 1000சிசி பைக்கான நிஞ்சா 1000 உள்ளது. கடந்த மாதத்தில் 57 நிஞ்சா 1000 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 மார்ச்சில் 15 நிஞ்சா 1000 பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இதற்கடுத்து 3வது இடத்திலும் மற்றொரு கவாஸாகி 1000சிசி பைக்கான நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் 47 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த 1000சிசி பைக் கடந்த ஆண்டு மார்ச்சின் போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. 4வது இடத்தில் மீண்டும் கவாஸாகி நிஞ்சா பைக்காக நிஞ்சா650 உள்ளது. ஆனால் 2021 மார்ச்சில் 37 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த நிஞ்சா 650 பைக் கடந்த மார்ச்சில் 33 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இந்த வகையில் இந்த கவாஸாகி 650சிசி பைக்கின் விற்பனை 10.81% குறைந்துள்ளது. இதற்கு விற்பனையில் நேரெதிர் போட்டி மாடலாக விளங்கும் ஹோண்டா சிபிஆர்650எஃப் கடந்த மாதத்தில் 27 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச்சில் 10 சிபிஆர்650எஃப் பைக்குகளை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக்கின் விற்பனை 170% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இவற்றிற்கு அடுத்து டிரையம்ப் டைகர் 660 6வது இடத்தை பிடித்துள்ளது. 2021 மார்ச்சில் விற்பனையில் இல்லாத இந்த டிரையம்ப் பைக் கடந்த மாதத்தில் 23 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கு அப்டேட் செய்யப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஹோண்டா ஆப்பிரிக்கா இரட்டை பைக்குகளின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 17 யூனிட்களாகும். 2021 மார்ச்சில் 9 ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

டிரையம்ப் ட்ரைடெண்ட் பைக்கின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 16 ஆகும். இது 2021 மார்ச்சை காட்டிலும் 6 யூனிட்கள் அதிகம். கடந்த ஆண்டுகளில் ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகி கொண்டிருந்த டிரையம்ப் டைகர் 900 அட்வென்ச்சர் பைக் கடந்த மாதத்தில் 16 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. 2021 மார்ச்சில் இதன் விற்பனை எண்ணிக்கை 27 ஆகும்.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

இதன்படி பார்க்கும்போது, இந்த டிரையம்ப் அட்வென்ச்சர் பைக்கின் விற்பனை 40.74% குறைந்துள்ளது. இதற்கடுத்து 10வது இடத்தில் ஹார்லி-டேவிட்சனின் பிரபலமான ஃபேட் பாப் மோட்டார்சைக்கிள் உள்ளது. இந்த ஹார்லி-டேவிட்சன் பைக் கடந்த மாதத்தில் 15 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 11வது இடத்தில் டிரையம்ப்பின் அதிசெயல்திறன்மிக்க ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் உள்ளது.

இந்தியாவில் இத்தனை 1000சிசி பைக்குகள் விற்பனையாகுகின்றனவா!! மாஸ் காட்டும் கவாஸாகி!

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாப் மற்றும் டிரையம்ப் டைகர் 3 இவை இரண்டும் கடந்த ஆண்டு மார்ச்சில் விற்பனையில் இல்லை. இவற்றிற்கு அடுத்து 12வது, 13வது மற்றும் 14வது இடங்களை முறையே கவாஸாகி பைக்குகளான வெர்ஸஸ்650, இசட்650ஆர்.எஸ் மற்றும் இசட்900 பிடித்துள்ளன. இவற்றில் இசட்900 பைக்கை தவிர்த்து மற்ற இரண்டும் தலா 12 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்க, இசட்900 10 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2022, 11:08 [IST]
English summary
Top 10 500cc plus motorcycles mar 2022
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+