இந்த ஸ்பிளெண்டர் பைக்ல அப்படி என்னதான் இருக்கு? ஒருத்தர் விடாம எல்லாருக்கும் பிடிக்குதே! ஹேட்டர்ஸே இல்லயா?
இந்தியாவில் பலருக்கும் பிடித்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. வழக்கம் போல! நடப்பாண்டு ஜூன் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,70,923 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 2,64,009 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விற்பனையில் 2.62 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா சிபி ஷைன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவே அதிகம் விற்பனை செய்யப்பட்ட டூவீலர்களின் பட்டியல் என்றால், முதல் இரண்டு இடங்களுக்கு ஹீரோ ஸ்பிளெண்டரும், ஹோண்டா ஆக்டிவாவும் மல்லு கட்டியிருக்கும்!

ஆனால் இது பைக்குகளின் பட்டியல் என்பதால், ஹோண்டா சிபி ஷைன் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,25,947 சிபி ஷைன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 71,869 ஆக மட்டுமே இருந்தது. இது 75.2 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் 3வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1,13,155 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 1,10,724 ஆக இருந்தது. இதன் மூலம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் 2.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் பைக் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் பஜாஜ் நிறுவனம் 83,723 பல்சர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 79,150 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் பஜாஜ் பல்சர் பைக் விற்பனையில் 5.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் ஹீரோ க்ளாமர் பைக் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 30,105 க்ளாமர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 18,759 ஆக மட்டுமே இருந்தது. இது 60.4 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா பைக் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டு ஜூன் மாதம் பஜாஜ் நிறுவனம் 27,732 பிளாட்டினா பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 43,313 ஆக இருந்தது. இது 35.9 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 2 பைக்குகளை மட்டுமே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதில் பஜாஜ் பிளாட்டினாவும் ஒன்றாகும். மற்றொரு பைக் எது? என்பதை இந்த செய்தியின் இறுதியில் பார்க்கலாம்.

இதற்கிடையே இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 25,425 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 17,377 ஆக இருந்தது. இது 36 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் யமஹா எஃப்இஸட் பைக்கிற்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

நடப்பாண்டு ஜூன் மாதம் யமஹா நிறுவனம் 19,305 எஃப்இஸட் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 11,084 ஆக மட்டுமே இருந்தது. இது 74.1 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ பேஷன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 18,560 பேஷன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 16,113 ஆக மட்டுமே இருந்தது. இது 15.1 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடம் டிவிஎஸ் அப்பாச்சிக்கு கிடைத்துள்ளது. இதுதான் இந்த பட்டியலில் வீழ்ச்சியை சந்தித்துள்ள 2வது பைக் ஆகும். நடப்பாண்டு ஜூன் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 16,737 டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 30,233 ஆக இருந்தது. இது 44.6 சதவீத வீழ்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








