பட்டைய கௌப்பும் ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனை... வேற எந்த பைக்கும் பக்கத்துல கூட வர முடியல!
இந்தியாவில் நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு மே மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெறும் 1,00,435 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 2,62,249 ஆக உயர்ந்துள்ளது. இது 161.11 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 42,118 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,27,330 ஆக உயர்ந்துள்ளது. இது 202.32 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் தன்வசப்படுத்தியுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் (Honda CB Shine) பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஹோண்டா நிறுவனம் வெறும் 14,666 சிபி ஷைன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,19,765 ஆக உயர்ந்துள்ளது. இது 716.62 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 39,625 ஆக இருந்த பஜாஜ் பல்சர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 69,241 ஆக உயர்ந்துள்ளது. இது 74.74 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 9,239 கிளாசிக் 350 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 29,959 ஆக உயர்ந்துள்ளது. இது 224.27 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ கிளாமர் (Hero Glamour) பைக்கிற்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 28,363 கிளாமர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 7,313 ஆக மட்டுமே இருந்தது. இது 287.84 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் டிவிஎஸ் நிறுவனம் 19,885 அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 27,044 ஆக உயர்ந்துள்ளது. இது 36 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கிற்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 11,164 பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 17,336 ஆக உயர்ந்துள்ளது. இது 55.28 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ள யமஹா எஃப்இஸட் (Yamaha FZ) விற்பனையில் 400.93 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 3,008 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 15,068 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடம் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) பைக்கிற்கு கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,905 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 11,818 ஆக உயர்ந்துள்ளது. இது 71.15 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை மிகவும் தீவிரமாக இருந்த காரணத்தால், பைக்குகளின் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் நிலைமை தற்போது சீராக உள்ள காரணத்தால், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 10 பைக்குகளும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








