இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

கொரோனா வைரஸ் பரவல் சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட போதிலும், கடந்த மாதத்தில் இந்தியாவில் பைக்குகள் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது இதுகுறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

கடந்த மாதத்தில் முதல் 10 பைக்குகள் மட்டுமே மொத்தமாக 5,39,547 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே இந்த மொத்த விற்பனை எண்ணிக்கை 2021 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் சுமார் 25.40% அதிகமாக 7,23,290 ஆக பதிவாகி இருந்தது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் வழக்கம்போல் முதலிடத்தை ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளெண்டர் 1,93,731 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 2,47,422 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை கடந்த மாதத்தில் 21.70% குறைந்துள்ளது. இவ்வாறு விற்பனை சற்று குறைந்திருப்பினும், மொத்த விற்பனையில் ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே 35.91 சதவீதத்தை பிடித்துள்ளன.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

இதற்கடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட பைக்காக ஹோண்டா சிபி ஷைன் 81,700 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கைக்கும் ஸ்பிளெண்டரின் விற்பனை எண்ணிக்கைக்கும் இடையே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் வித்தியாசம் உள்ளதை அறியலாம். சிபிஷைன் மாடலின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2021 பிப்ரவரியை காட்டிலும் 29.55% குறைவாகும்.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

ஏனெனில் அந்த மாதத்தில் 1,15,970 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மூன்றாவது இடத்தில் மீண்டும் ஹீரோவின் பைக்காக எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது. 2021 பிப்ரவரியில் 1,26,309 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் கடந்த மாதத்தில் 75,927 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த மலிவான ஹீரோ பைக்கின் விற்பனை 39.89% குறைந்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

இதேபோல் நான்காவது இடத்தில் உள்ள பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 32.54% குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 81,454 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 54,951 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 இதற்கடுத்து ஐந்தாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்
No. Top 10 motorcycles February'22 February'21 Growth (%)
1 spiendor 1,93,731 2,47, 422 -21.70
2 CB Shine 81, 700 1, 15,970 -29.55
3 HF deluxe 75, 927 1, 26,309 -39.89
4 Pulser 54, 951 81, 454 -32.54
5 Classic 350 30, 082 36, 025 -16.50
6 Platina 29, 124 46, 264 -37.05
7 Glamour 27, 406 27, 375 0.11
8 Apache 16, 406 31, 735 -48.30
9 Dream 15, 476 10, 736 44.15
10 Raider 14, 744 0 -
- Total 5, 39, 547 7, 23, 290 -25.40

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை 30,082 ஆகும். அதுவே 2021 பிப்ரவரியில் 36,025 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனை 16.50% சரிந்துள்ளது. இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் பஜாஜ் பிளாட்டினா மற்றும் ஹீரோ கிளாமர் பைக்குகள் முறையே 29,124 மற்றும் 27,406 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன.

இந்தியாவில் மீண்டும் சரிவை கண்டு கொண்டிருக்கும் பைக்குகள் விற்பனை!! வழக்கம்போல் முதலிடத்தில் ஸ்பிளெண்டர்

இதில் பிளாட்டினா பைக்குகளின் விற்பனை 37.05 சதவீதம் குறைந்துள்ளது என்றாலும், ஹீரோ கிளாமர் பைக்குகளின் விற்பனை கணிசமாக 0.11% அதிகரித்துள்ளது. 8வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் சுமார் 48.30% வருடம்-வருடம் விற்பனை வீழ்ச்சியுடன் உள்ளன. 9வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் உள்ளது. இதன் விற்பனை 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 44.15% அதிகரித்துள்ளது. கடைசி 10வது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் சமீபத்திய அறிமுகமான ரைடர் 14,744 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2022, 11:51 [IST]
English summary
Top 10 motorcycles feb 2022 splendor leads
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+