இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

பல்வேறு விதமான பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், நம் நாட்டு சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு எப்போதுமே மார்க்கெட் உள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக தேவைகளுக்கு ஏற்ப ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாமல் தயாரிப்பு நிறுவனங்கள் போராடி வருகின்றன.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இதனால் ஸ்கூட்டர்களின் விற்பனை முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு மத்தியிலும் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்கூட்டர் என்றால், அது ஹோண்டா ஆக்டிவா -ஆகவே மாறிவிட்டது. இந்த நிலை கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,43,234 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஆக்டிவா ஸ்கூட்டர் வழக்கம்போல் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை முந்தைய 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

எந்த அளவிற்கு என்றால், இந்த வருடம்-வருடம் ஒப்பிடுகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை சுமார் 32.33% குறைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 2,11,660 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு விற்பனை சரிந்த போதிலும், இந்தியாவில் கடந்த மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட 44.61% ஆக்டிவா ஸ்கூட்டர்களாகும்.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இந்த வரிசையில் ஆக்டிவாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் 43,476 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் 16.32% அதிகமாக 51,952 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரை மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு சுஸுகியின் ஆக்ஸஸ் மாடல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 42,148 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

டிவிஎஸ் ஜூபிட்டர் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் இது சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாகும். சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 7.32% மட்டுமே குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்திலும் கிட்டத்தட்ட தற்போதைய விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக 45,475 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

நான்காவது இடத்தை இளைஞர்களின் ஃபேவரட்டான ஹோண்டா டியோ பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாக குறைந்து வருவதாக கடந்த மாதத்தில் கூட கூறியிருந்தோம். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், 2021 ஜனவரியில் 28,914 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 27,837 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இந்த வகையில் டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை வெறும் 3.72% மட்டுமே குறைந்துள்ளது. இதற்கடுத்து டிவிஎஸ் மோட்டாரின் மற்றொரு ஸ்கூட்டரான எண்டார்க் 21,120 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 27,766 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எண்டார்க் ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 23.94% குறைவாகும்.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இதேபோல் ஆறாவது இடத்தில் உள்ள ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் 29.07% குறைந்துள்ளது. ஏனெனில் 2021 ஜனவரியில் 18,603 பிளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 13,195 யூனிட்களாக குறைந்துள்ளது. இதற்கடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் சுஸுகி பர்க்மேன் மற்றும் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் உள்ளன.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 3ல் 1 பங்கு குறைந்தது!! ஜனவரி மாத விற்பனை 1.5 லட்சத்திற்கும் கீழ்

இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 9,504 மற்றும் 7,030 யூனிட்களாகும். இதில் சுஸுகியின் அளவில்-பெரிய ஸ்கூட்டரான பர்க்மேனின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 8.70 சதவீதம் அதிகமாகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் கடந்த 2022 ஜனவரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒரே ஸ்கூட்டர் பர்க்மேன் மட்டுமே ஆகும். இவற்றிற்கு அடுத்து 9வது மற்றும் பத்தாவது இடங்களில் சுஸுகி அவெனிஸ் (6,314 யூனிட்கள்) மற்றும் யமஹா ஃபேஸினோ (6,221) உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 11:21 [IST]
English summary
Top 10 scooters jan 2022 activa jupiter lead details
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+