ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இந்திய சந்தையில் கடந்த 2022 ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

Recommended Video

EVeium Electric Scooter Showroom Tamil Walkaround | Comet, Czar & Cosmo ரேஞ்ஜ் மற்றும் விபரங்கள்!

அவை என்னென்ன என்பதை, அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளுடன் ஒன்றன்பின் ஒன்றாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

உலகளவில் வாடிக்கையாளர்கள் பலர் பைக்குகளில் இருந்து ஸ்கூட்டருக்கு மாறி வருகின்றனர். அதாவது, 500சிசி-க்கு மேல் இருசக்கர வாகனம் என்றால் ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள் பக்கம் செல்கிறார்கள். அதுவே 500சிசி-க்கு கீழ் என்றால் வெளிநாடுகளில் பலரது தேர்வு ஸ்கூட்டர்களை நோக்கியே உள்ளது.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இதற்கு காரணம், எல்லாருக்கும் தெரிந்ததுதான், அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தேவை கிடையாது மற்றும் பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களை கண்ட்ரோல் செய்வது எளிது என்பவையே. இந்தியாவிலும் பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்கள் விற்பனையாகுகின்றன. இதற்கு கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தான் சாட்சியாகும்.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இந்தியாவில் பைக்குகள் விற்பனையில் ஹீரோ ஸ்பிளெண்டர் என்றால், அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. கடந்த ஜூலை மாதத்திலும் மொத்தமாக சுமார் 2,13,807 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,62,956 ஆக்டிவா ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது வருடம்-வருடம் ஒப்பீடுகையில் கிட்டத்தட்ட 31.21% கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. அதாவது, 2021 ஜூலையை காட்டிலும் கடந்த ஜூலையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 ஸ்கூட்டர்களில் ஆக்டிவாவின் பங்கு மட்டுமே 49.79% ஆகும்.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

அதாவது இந்தியாவில் 2இல் ஒருவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தேர்வு செய்கிறார். கடந்த மாத விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து 2வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் பிடித்துள்ளது. பெரும்பாலும் இந்த 2வது இடத்தை சுஸுகி மோட்டார்சைக்கிளின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் தான் பெறும். ஆனால் இம்முறை ஆக்ஸஸை முந்திக்கொண்டு ஜூபிட்டர் 2வது இடத்திற்கு வந்துள்ளது.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆனது 62,094 யூனிட்கள் ஆகும். ஆக்டிவாவை போன்று ஜூபிட்டரின் விற்பனை 2021 ஜூலையை காட்டிலும் கடந்த ஜூலையில் அதிகரித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 62.51%, அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 38,209 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இவற்றிற்கு அடுத்து 3வது இடத்திற்கு சரிந்துள்ள சுஸுகி ஆக்ஸஸ் கடந்த ஜூலை மாதத்தில் 41,440 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஜூலை மாதத்தில் 46,985 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது கடந்த மாதத்தில் 11.80% குறைந்துள்ளது மட்டுமின்றி, ஆக்ஸஸ் தனது 2வது இடத்தை இழந்துள்ளது.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில், தனது ஸ்டைலால் பலரை வசீகரித்த ஹோண்டா டியோ உள்ளது. அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் டாப்-5 இடத்திற்கு உள்ள மற்றொரு ஹோண்டா ஸ்கூட்டரான டியோ கடந்த ஜூலை மாதத்தில் 36,229 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை காட்டிலும் 75.83% குறைவாக கடந்த ஜூலையில் 20,604 டியோ ஸ்கூட்டர்களே விற்கப்பட்டு இருந்தன.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

அறிமுகத்திற்கு பிறகு இடையில் வேகமெடுத்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைய துவங்கிய நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியிருப்பதை காண முடிகிறது. 5வது இடத்தில் டிவிஎஸ் என்டார்க் 24,367 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2021 ஜூலையிலும் எண்டார்க் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை ஏறக்குறைய இந்த அளவில் தான் இருந்தது.

ட்ரெண்ட் போகாது போலயே... டியோ ஸ்கூட்டர்களை வாங்க கூட்டம் அள்ளுது!! டாப்-10 ஸ்கூட்டர் சேல்ஸ்

6வது மற்றும் 7வது இடங்களில் ஹீரோ பிளஷர் மற்றும் ஒகினவா பிரைஸ் ப்ரோ ஸ்கூட்டர்கள் உள்ளன. இதில் ஒகினவா பிரைஸ் ப்ரோ ஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த 7 ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையானவை ஆகும். இந்த டாப்-10 வரிசையில் கடைசி 3 இடங்களை முறையே சுஸுகி பர்க்மேன், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ மற்றும் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் பிடித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, August 21, 2022, 9:30 [IST]
English summary
Top 10 scooters july 2022 9 petrol 1 electric
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+