என்னப்பா போட்டிக்கு ஆளே இல்லனு அறிவிச்சடலாமா? வழக்கம் போல முதலிட சிம்மாசனத்தில் ஹோண்டா ஆக்டிவா!
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் வெறும் 94,724 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 1,84,305 ஆக உயர்ந்துள்ளது. இது 94.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter), இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 31,848 ஆக இருந்த டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 62,851 ஆக உயர்ந்துள்ளது. இது 97.3 சதவீத வளர்ச்சியாகும். முதலிடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவாவிற்கும், மற்ற ஸ்கூட்டர்களுக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் சுஸுகி அக்ஸெஸ் (Suzuki Access) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் 34,131 அக்ஸெஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 31,399 ஆக மட்டுமே இருந்தது. இது 8.7 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹோண்டா டியோ (Honda Dio) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 18,983 ஆக இருந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 26,450 ஆக உயர்ந்துள்ளது. இது 39.3 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 15,544 என்டார்க் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 22,741 ஆக உயர்ந்துள்ளது. இது 46.3 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் (Hero Pleasure+) ஆறாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 17,937 ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 11,321 ஆக சரிந்துள்ளது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள 32.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் வீழ்ச்சியை சந்தித்துள்ள ஒரே ஒரு ஸ்கூட்டர் இது மட்டுமே.

இந்த பட்டியலில் சுஸுகி அவ்னிஸ் (Suzuki Avenis) ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் சுஸுகி நிறுவனம் 9,284 அவ்னிஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட இயலாது.

இந்த பட்டியலில் அதே சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street) எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 7,935 ஆக இருந்த இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 8,793 ஆக உயர்ந்துள்ளது. இது 11.4 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் யமஹா ரேஇஸட்ஆர் (Yamaha RayZR) ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 2,229 யமஹா ரேஇஸட்ஆர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 8,091 ஆக உயர்ந்துள்ளது. இது 262.9 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் யமஹா ஃபஸினோ (Yamaha Fascino) ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் யமஹா நிறுவனம் 2,065 ஃபஸினோ ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 7,915 ஆக உயர்ந்துள்ளது. இது 283.2 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே விற்பனையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பது ஃபஸினோதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








