ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

இந்திய இருசக்கர வாகன ஏற்றுமதி கடந்த மாதத்தில் கணிசமாக 2.49% குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் 3,84,379 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2022 ஜனவரியில் அதனை காட்டிலும் 9,557 யூனிட்கள் குறைவாக, 3,74,822 யூனிட் 2-வீலர்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா போன்ற இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டாலும், ஏற்றுமதியை பொறுத்தவரையில், பஜாஜ் பாக்ஸர் மோட்டார்சைக்கிளே முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதத்திலும் எளிதாக 1 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாக்ஸர் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

கடந்த ஜனவரி மாதத்திலும் சுமார் 1,03,988 பாக்ஸர் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது பாக்ஸரின் 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.04% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 1,15,600 பாக்ஸர் பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் விற்பனையில் இல்லாவிடினும், ஆப்பிரிக்க நாடுகளில் பஜாஜ் பாக்ஸர் பிரதான அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக உள்ளது.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

இதனாலேயே இந்தியாவில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த 2-சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் பாக்ஸரின் பங்கு மட்டுமே 27.74% ஆக உள்ளது. இதற்கடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கிற்கும், பஜாஜ் பாக்ஸருக்கும் இடையே 70 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

ஏனெனில் 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 31,366 யூனிட்களின் ஏற்றுமதியையே பதிவு செய்துள்ளது. ஆனால், 26,488 ஸ்டார் சிட்டி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஏற்றுமதி எண்ணிக்கை கிட்டத்தட்ட 18.42% அதிகமாகும். மூன்றாவது இடத்தில் ஸ்டார் சிட்டி பைக்கின் 125சிசி வெர்சன் 28,049 யூனிட்களின் ஏற்றுமதி உடன் உள்ளது.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

ஆனால் 2021 ஜனவரியில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார் சிட்டி 125 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. ஆக மொத்தத்தில், ஸ்டார் சிட்டி பைக்குகளை மட்டுமே கடந்த ஜனவரியில் ஏறக்குறைய 50,000 யூனிட்களுக்கு வெளிநாடுகளுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இவற்றிற்கு அடுத்து அதிகப்பட்சமாக 160சிசி-200சிசி பல்சர் பைக்குகள் 13,684 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

இவற்றின் ஏற்றுமதி 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 24.21% குறைந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் பஜாஜ் பாக்ஸர் பைக்கின் 125சிசி வெர்சன் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பாக்ஸர் 125 பைக்குகள் 12,948 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த 125சிசி பஜாஜ் பைக்கின் ஏற்றுமதி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்த வகையில் பாக்ஸர் 125-இன் ஏற்றுமதி 36.13% குறைந்துள்ளது.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

ஆனால் 2021 ஜனவரியில் வெறும் 1,566 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள் கடந்த ஜனவரி மாதத்தில் 10,642 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, இதன் ஏற்றுமதி சுமார் 579.57% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கை உடன் யமஹா எஃப்.இசட் மற்றும் ஹோண்டா நேவி மினி-பைக் உள்ளன.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

இவை இரண்டின் கடந்த ஜனவரி மாத ஏற்றுமதி எண்ணிக்கைகள் முறையே 10,370 மற்றும் 10,348 ஆகும். ஆனால் 2021 ஜனவரியில் இவற்றின் ஏற்றுமதி எண்ணிக்கைகள் முறையே 5,676 மற்றும் 6,028 என்றே பதிவாகி இருந்தது. இவற்றிற்கு அடுத்து சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாக டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் கடந்த ஜனவரியில் 10,132 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஸ்பிளெண்டர் இல்ல, ஆக்டிவா இல்ல... வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பைக் இதுதான்!!

ஆனால் 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் 37.43% அதிகமாக 16,192 அப்பாச்சி பைக்குகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. கடைசி பத்தாவது இடத்தில் 9,816 யூனிட்களின் ஏற்றுமதி உடன் பஜாஜ் சிடி125 உள்ளது. அதுவே இந்த பஜாஜ் பைக்கின் கடந்த ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதி எண்ணிக்கை 6,551 ஆகும். இந்த வகையில் இதன் ஏற்றுமதி 49.84% குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2022, 11:16 [IST]
English summary
Top 10 two wheeler exports jan 2022 details
மேலும்... #ஏற்றுமதி #exports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+