நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூவீலர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Maruti Alto K10 Launched At Rs 3.99 Lakh In TAMIL | What’s New On The Hatchback? Dual-Jet VVT & AMT

இதில், ஹோண்டா டியோ ஸ்கூட்டர் கெத்து காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூவீலர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 2,50,794 இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 2,50,409 ஆக சரிந்துள்ளது. இது 0.15 சதவீத வீழ்ச்சியாகும்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இது சிறிய வீழ்ச்சிதான் என்பதால், வரும் மாதங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை வழக்கம் போல மீண்டும் உயரலாம். இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,62,956 இருந்த இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 2,13,807 ஆக உயர்ந்துள்ளது. இது 31.2 சதவீத வளர்ச்சியாகும்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இந்த பட்டியலில் ஹோண்டா சிபி ஷைன் (Honda CB Shine) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,16,128 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 1,14,663 ஆக குறைந்துள்ளது. இது 1.2 சதவீத வீழ்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 65,094 இருந்த பல்சர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 1,01,905 ஆக உயர்ந்துள்ளது. இது 56.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,06,304 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 97,451 ஆக குறைந்துள்ளது. இது 8.3 சதவீத வீழ்ச்சியாகும்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இந்த பட்டியலில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 38,209 ஆக இருந்த இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 62,094 ஆக உயர்ந்துள்ளது. இது 62.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கிற்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 54,606 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 48,484 ஆக குறைந்துள்ளது. இது 11.2 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் சுஸுகி அக்ஸெஸ் (Suzuki Access) ஸ்கூட்டர் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 46,985 ஆக இருந்த இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 41,440 ஆக குறைந்துள்ளது. இது 11.8 சதவீத வீழ்ச்சியாகும்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இந்த பட்டியலில் ஹோண்டா டியோ (Honda Dio) ஸ்கூட்டர் ஒன்பதாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 20,604 ஆக இருந்த இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 36,229 ஆக உயர்ந்துள்ளது. இது 75.8 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே அதிக வளர்ச்சியை பதிவு செய்த டூவீலர் என்ற பெருமையை ஹோண்டா டியோ தன்வசப்படுத்தியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர்... இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையலயாட்ட இருக்கு... கெத்து காட்டிய ஹோண்டா டியோ!

இதற்கிடையே இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை டிவிஎஸ் எக்ஸ்எல்100 (TVS XL100) மொபட் பிடித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 49,279 எக்ஸ்எல்100 மொபட்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 32,117 ஆக குறைந்துள்ளது. இது 34.8 சதவீத வீழ்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 20, 2022, 19:39 [IST]
English summary
Top 10 two wheelers in july 2022 hero splendor leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+