புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

உலகளவில் தற்சமயம் வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் அடைந்துவரும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும். குறிப்பாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான சந்தை கடந்த சில வருடங்களில் நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. இதனாலேயே எலக்ட்ரிக் 2-வீலர்ஸை தயாரிக்கும் புது புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தையில் தோன்றியுள்ளன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

இவற்றின் உதவியுடன் கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1.43 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் கடந்த ஆண்டில் அதிகளவில் எலக்ட்ரிக் 2-வீலர்ஸை விற்பனை செய்த டாப்-5 பிராண்ட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ப்யூர் இவி

முதலாவதாக நாம் பார்க்கவுள்ளது, இந்த வரிசையில் 5வது இடத்தில் இருக்கும் ப்யூர் இவி -ஐ பற்றி ஆகும். முதன்முதலாக 5 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ப்யூர் இவி இந்த குறுகிய காலத்தில் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் பிராண்டாக உருவெடுத்துள்ளது.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ப்யூர் இவி நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டில் மொத்தமாக 11,039 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 டிசம்பரில் மட்டும் 1,684 யூனிட்கள். ப்யூர் இவி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இப்ளூட்டூ 7ஜி, இ-ட்ரான்ஸ் நியோ, இ-ட்ரான்ஸ் மற்றும் இ-ட்ரான் ப்ளஸ் என 4 எலக்ட்ரிக் 2-வீலர் மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ஆம்பியர் வாகனங்கள்

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படும் ஆம்பியர் கடந்த ஆண்டில் அதிகம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நான்காவது பிராண்டாக உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 12,470 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

கடந்த ஆண்டில் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 8 சதவீதத்தை கொண்டுள்ள ஆம்பியர் பிராண்டில் இருந்து 2021இன் கடைசி டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,343 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ரியோ, ரியோ எலைட், மேக்னசு இஎக்ஸ், மேக்னசு பிரோ மற்றும் ஜியல் என மொத்தம் ஐந்து இ-ஸ்கூட்டர்கள் ஆம்பியரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ஏத்தர் எனர்ஜி

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி ஆனது சற்று விலைமிக்க, பிரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடிய பிராண்டாக விளங்குகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்தம் 15,921 யூனிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ள ஏத்தர் எனர்ஜி மொத்த இருசக்கர இவி விற்பனையில் 11 சதவீத பங்கை கொண்டுள்ளது.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் 1,810 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ள ஏத்தர் எனர்ஜி தற்போதைக்கு 450 மற்றும் 450எக்ஸ் என்ற இரு செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.40 லட்சம் என்கிற அளவில் உள்ளன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ஒகினாவா ஆட்டோடெக்

கடந்த ஆண்டில் அதிகளவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட 2வது பிராண்டாக ஒகினாவா விளங்குகிறது. ஒகினாவா ஆட்டோடெக்கின் தற்போதைய சந்தை பங்கு 20% ஆகும். அதாவது நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 100 எலக்ட்ரிக் 2-வீலர்ஸில் கிட்டத்தட்ட 20 யூனிட்கள் ஒகினாவா நிறுவனத்துடையதாக இருக்கின்றன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

கடந்த ஆண்டில் மொத்தம் 29,945 யூனிட் இருசக்கர வாகனங்களை ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாத விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக்கையே ஒகினாவா 6,098 யூனிட்களின் விற்பனை உடன் முந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஒகினாவா பிராண்டில் இருந்து மொத்தம் 6 இவி மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

ஹீரோ எலக்ட்ரிக்

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை என்று பார்க்கும்போது, நிச்சயமாக இதில் ஹீரோ எலக்ட்ரிக்கின் பெயரை கூறாமல் இருக்க முடியாது. ஏனெனில் இப்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ எலக்ட்ரிக் விளங்குகிறது.

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்த 5 பிராண்ட்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் - டாப்-5 இவைதான்

எந்த அளவிற்கு என்றால், நம் நாட்டில் விற்பனையாகும் மொத்த எலக்ட்ரிக் 2-வீலர்ஸில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்துடையது தானாம். கடந்த ஆண்டில் மொத்தம் 46,260 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் விற்பனை செய்துள்ளது. இதில் 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 6,058 ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 15, 2022, 7:30 [IST]
English summary
Top 5 electric two-wheeler makers in India in 2021: Hero, Okinawa lead the pack.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+