இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

கடந்த 2022 ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவை என்னென்ன என்பதையும், அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

பெட்ரோல் இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஜூலையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அப்படியென்றால், எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை எந்த அளவிற்கு பதிவாகியிருக்கும் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

ஏனெனில், பெட்ரோல் 2-வீலர்களின் விற்பனை பெரியதாக இல்லாத மாதங்களிலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் கணிசமாக முன்னேற்றத்தை கண்டு வந்துள்ளன. குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் ஒகினவாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக 10,041 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் விற்பனை லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பது மட்டுமில்லாமல், மொத்த 2-வீலர்ஸ் விற்பனையிலும் 7வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கும் அந்த ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பிரைஸ் ப்ரோ ஆகும். கடந்த ஜூலையில் 10,041 யூனிட்கள் விற்பனையாகியுள்ள பிரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் வெறும் 2,171 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது.

Model July'22 July'21
Okinawa Praise Pro 10,041 2,171
TVS iQube 6,304 540
Bajaj Chetak 3,002 730
Ather 450X 2,714 2,100
Okinawa Ridge Plus 1,302 360
இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

தற்சமயம் ஒகினவா பிரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.87,593 ஆக உள்ளது. முதல்முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலரது முதல் தேர்வாக விளங்கும் இந்த ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 88 கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

இதற்கடுத்து 2வது இடத்தில் இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்டான டிவிஎஸ் மோட்டாரின் ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் எலக்ட்ரிக் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 6,304 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் 2021 ஜூலை உடன் ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

ஏனெனில் 2021 ஜூலையில் வெறும் 540 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. முதலிடத்தில் உள்ள ஒகினவா பிரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில், ஐக்யூப் சற்று பிரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. ஏனென்றால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.01 லட்சத்தில் இருந்து ரூ.1.04 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் ஆனது 100கிமீ ஆகும். அதாவது 0-100% சார்ஜில் அதிகப்பட்சமாக 100கிமீ வரையில் இந்த இ-ஸ்கூட்டரில் பயணிக்கலாம். டிவிஎஸ் ஐக்யூப்பிற்கு விற்பனையில் நேரெதிர் போட்டி மாடலாக விளங்கிவரும் பஜாஜ் சேத்தக் இம்முறை 3வது இடத்தை தனதாக்கியுள்ளது. கடந்த ஜூலையில் விற்பனை செய்யப்பட்ட சேத்தக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆனது 3,002 யூனிட்களாகும்.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

அதுவே 2021 ஜூலையில் 730 சேத்தக் ஸ்கூட்டர்களை மட்டுமே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்யூப்பை காட்டிலும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த ஜூலையில் சேத்தக்கை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

இந்தியாவின் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450 எக்ஸ் இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் 2,100 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த ஜூலை மாதத்தில் அதனை காட்டிலும் சற்று அதிகமாக 2,714 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இ-ஸ்கூட்டர்கள் விற்பனையில் டிவிஎஸ், பஜாஜிற்கு தண்ணி காட்டும் ஒகினவா!! ஒரே மாதத்தில் 10,000 ஸ்கூட்டர்கள் சேல்ஸ்

இவற்றை தொடர்ந்து 5வது இடத்திலும் ஒகினவாவின் மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ரிட்ஜ் ப்ளஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 1,302 ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 360 ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 11:26 [IST]
English summary
Top 5 electric two wheelers in july 2022 ola not in the list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+