500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

ஒரு காலத்தில் 300சிசி, 500சிசி பைக்குகள் எல்லாம் வெளிநாடுகளில் தான் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியாவிலும் 500சிசி-க்கு மேற்பட்ட பைக்குகளுக்கான சந்தை வளர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

ஐரோப்பா, வட அமெரிக்கா அளவிற்கு இல்லையென்றாலும், கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட பிரீமியம் தர 500சிசி+ மோட்டார்சைக்கிள்கள் நம் நாட்டில் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மோட்டர்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

இந்தியாவில் கடந்த மாதத்தில் மொத்தம் 1,570 500சிசி+ மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,648 யூனிட்களாக பதிவாகியது. இந்த வகையில் 500சிசி+ மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் கிட்டத்தட்ட 4.73% குறைந்துள்ளது.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

இந்த மொத்த விற்பனையில் சுமார் 78.85 சதவீத பங்கு ராயல் என்பீல்டின் 650 இரட்டை பைக்குகள் உடையது ஆகும். வழக்கம்போல் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள 650 இரட்டை பைக்குகளில் இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650 உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் மொத்தமாக 1,238 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

அதுவே 2021 ஜனவரியில் 1,392 யூனிட்கள் இவை விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளின் விற்பனை 11.06% வருடம்-வருடம் ஒப்பீடுகையில் குறைந்துள்ளது. அதாவது, அந்த மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் 154 650-இரட்டை பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

இவற்றிற்கு அடுத்து இந்த வரிசையில் உள்ளவை 100 யூனிட்களுக்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே கொண்டவை ஆகும். இரண்டாவது இடத்தை இந்தியாவில் தற்போதைக்கு பிரபலமான கவாஸாகி பைக்காக விளங்கும் இசட்900 பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 57 இசட்900 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் 14% குறைவாக 50 இசட்900 பைக்குகளையே கவாஸாகி விற்பனை செய்திருந்தது.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

3வது மற்றும் 4வது இடங்களில் முறையே 25 மற்றும் 22 யூனிட்களின் விற்பனை உடன் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களான ட்ரைடெண்ட் மற்றும் டைகர் 900 உள்ளன. இதில் ட்ரைடெண்ட் பைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றொரு டைகர் 900 ஆனது 2021 ஜனவரியில் கடந்த ஜனவரியை காட்டிலும் 15.38% அதிகமாக 26 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

டிரையம்ப் ட்ரைடெண்ட் பைக்கை போல் கடந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 20 சிபிஆர் 650எஃப் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையில் இந்த 650சிசி ஹோண்டா செமி-ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு போட்டியாக உள்ள மற்றொரு ஜப்பானிய மாடலான கவாஸாகி நிஞ்சா 650 இம்முறை 6வது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

ஏனெனில் இசட்900-ஐ போல் இந்தியாவில் இப்போதைக்கு பிரபலமான கவாஸாகி பைக்காக விளங்கும் நிஞ்சா 650 கடந்த மாதத்தில் வெறும் 18 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. அதுவே 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 39 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன. மிக பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த ஆண்டில் இந்தியாவில் களமிறக்கப்பட்ட சுஸுகி ஹயபுஸா 18 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தை தனதாக்கியுள்ளது.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

இதற்கு அடுத்து 8வது இடத்தில் உள்ள டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் கடந்த மாதத்தில் 14 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த டிரையம்ப் நாக்டு பைக்கின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 7 ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

500சிசி-க்கு மேற்பட்ட பைக் என்றால், எல்லாருடைய சாய்ஸும் இதுதான் போல!! அதிர வைக்கும் ராயல் என்பீல்டு

இதேபோல் 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ள ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மற்றும் கவாஸாகி நிஞ்சா1000 கடந்த மாதத்தில் தலா 14 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் ஹார்லி-டேவிட்சன் பைக்கின் 2021 ஜனவரி மாத விற்பனை ஜீரோவாக பதிவான நிலையில், கவாஸாகியின் 1000சிசி பைக்குகளுள் ஒன்றான நிஞ்சா1000 21 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 25, 2022, 11:13 [IST]
English summary
Top 500cc plus motorcycles jan 2022 re 650 twins lead segment
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+