தீ பிடித்து எரிந்தாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோகம் குறையவில்லை... அசராத மே மாத விற்பனை...
கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இதில் எந்த ஸ்கூட்டர் அதிகமாக விற்பனையாகியுள்ளது. எது குறைவாக விற்பனையாகியுள்ளது. எனக் காணலாம் வாருங்கள்.

எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் பல கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீ பிடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது. இது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரும் சரிவை ஏற்படுத்தும் எனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த மே மாத விற்பனையில் அப்படியான எந்த தாக்கமும் தெரியவில்லை. ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மட்டும் விற்பனை பாதிப்பைப் பெரிய அளவில் சந்தித்துள்ளது.

கடந்த மே மாதம் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மொத்தம் 28,120 எண்ணம் இந்தியா முழுவதும் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாத விற்பனையை விட 1.44 சதவீதம் அதிகம் கடந்த 2021 மே மாத விற்பனையை விட 1,394.95 சதவீதம் அதிகம் ஆகும். இதில் எந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது? என்ற விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

ஓலா எஸ்1 ப்ரோ
பட்டியலில் அதிக ஸ்கூட்டர்கள் விற்பனையாகி முதலிடத்தில் இருப்பது ஓலா எஸ்1 ப்ரே தான். கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 9,225 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுகடந்த ஏப்ரல் மாத விற்பனையை விட 27.35 சதவீதம் குறைவு தான். இதற்கு முக்கியமான காரணம் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து எரிந்தது தான் எனச் சொல்கிறார்கள்.

ஓகினாவா பிரைஸ் ப்ரோ
இரண்டாவது இடத்தில் ஓகினாவா பிரைஸ் ப்ரோ ஸ்கூட்டரை சொல்கிறார்கள். கடந்த மே மாதம் மொத்தம் 7,339 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 7,196 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஒரே மாதத்தில் 1.99 சதவீத வளர்ச்சியை இந்த ஸ்கூட்டர் விற்பனை சந்தித்துள்ளது.

ஏத்தர் 450
பட்டியலில் 3வது இடத்தில் ஏத்தர் 450 ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த மே மாதம் மொத்தம் 3,667 ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 3779 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தது. மே மாதத்தில் 2.96 சதவீதம் விற்பனை சரிவு தான்.

டிவிஎஸ் ஐக்யூப்
அடுத்தாக டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் இருக்கிறது. இது கடந்த மே மாதம் மொத்தம் 2,637 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 1420 ஸ்கூட்டர்கள்மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே மாதத்தில் 85.70 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

பஜாஜ் சேதக்
அடுத்ததாக பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த மே மாதம் 2544 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 1246 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஒரே ஆண்டில் 104.17 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஓகினாவா ஐ பிரைஸ்
அடுத்த இடத்தில் ஓகினாவா ஐ பிரைஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் கடந்த மே மாதம் மொத்தம் 2,050 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 1715 ஸ்கூட்டர் தான் விற்பனையாகியிருந்தது. ஒரே மாதத்தில் 19.53 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஓகினாவா ரிட்ஜ் +
அடுத்தாக ஓகினாவா ரிட்ஜ் + ஸ்கூட்டர் கடந்த மே மாதம் 562 பைக்குகள் விற்பனையாகியிருந்தன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 475 பைக்குகள் விற்பனையாகியிருந்தன. ஒரே மாதத்தில் 18.32 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஓகினாவா ஓகி 90
கடைசி இடத்தில் ஓகினாவா ஓகி 90 என்ற ஸ்கூட்டர் இருக்கிறது. இது கடந்த மே மாதம் மொத்தம் 96 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 2 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஒரே மாதத்தில் 4700 சதவீதம் வளர்ச்சியாகும்.

| Rank | Model | May-22 | May-21 | Growth (%) YoY |
| 1 | ஒலா எஸ்1 ப்ரோ | 9,225 | 0 | - |
| 2 | ஒகினாவா பிரைஸ் ப்ரோ | 7,339 | 684 | 972.95 |
| 3 | ஏத்தர் 450 | 3,667 | 75 | 4,789.33 |
| 4 | டிவிஎஸ் ஐக்யூப் | 2,637 | 0 | - |
| 5 | பஜாஜ் சேதக் | 2,544 | 31 | 8,106.45 |
| 6 | ஒகினாவா ஐ- பிரைஸ் | 2,050 | 42 | 4,780.95 |
| 7 | ஒகினாவா ரிட்ஜ் + | 562 | 178 | 215.73 |
| 8 | ஒகினாவா ஓகி 90 | 96 | 0 | - |

கடந்த 2021 மே மாதம் கொரோனா தாக்கம் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதால் அந்த கால விற்பனையுடன் கடந்த மே மாத விற்பனையை ஒப்பிடுவது சரி கிடையாது. அதனால் கடந்த ஏப்ரல் மாத விற்பனை ஒப்பீட்டை மட்டும் வழங்கியுள்ளோம்.

கடந்த மாதம் மைக்ரோ சிப் தட்டுப்பாடு காரணமாக ஹீரோ எலெக்டரிக் நிறுவனத்தால் ஒரு ஸ்கூட்டரை கூட விற்பனை செய்ய முடியவில்லை. உற்பத்தியில் கடும் பாதிப்பை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் உங்களுக்கு விருப்பமான ஸ்கூட்டர் எது கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








