தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

தினசரி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற மலிவு விலைக் கொண்ட கவர்ச்சியான இருசக்கர வாகனங்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

பைக்தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் பலர் உள்ளனர். இத்தகையோருக்கு ஏற்ற டூ-வீலர்கள் சிலவற்றின் பட்டியலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மிகக் குறைவான விலைக் கொண்ட இருசக்கர வாகனங்களின் பட்டியலைதான் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

150 சிசி தொடங்கி 160 சிசி வரையிலான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களே தினசரி பயன்பாட்டாளர்களுக்கான இருசக்கர வாகனங்களாக கருதப்படுகின்றன. ஏனெனில், இவைதான் குறைந்த விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும், அதேநேரத்தில் நல்ல மைலேஜையும் வழங்கும். இதுமாதிரியான வசதிகளுடன் குறைவான விலையில் கிடைக்கும் பைக்குகளின் லிஸ்டையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

ஹோண்டா யுனிகார்ன் (Honda Unicorn)

தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமான டூ-வீலராக ஹோண்டா யூனிகார்ன் இருக்கின்றது. இப்பைக்கில் 162.7 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிக சிறந்த மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவையும் வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

ஆகையால், செலவு செய்யும் பணத்திற்கு உகந்த வாகனமாக அது காட்சியளிக்கின்றது. தற்போது ரூ. 1.02 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக்கில் பயணத்தின்போது அலுப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150)

பஜாஜ் பல்சர் 150 பல இளைஞர்களின் பிரியமான பைக் மாடலாக இருக்கின்றது. இந்த பைக் ரூ. 1.03 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கில் 149.9 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 13.25 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதுமாதிரியான இன்னும் பல சிசி திறன் கொண்ட மோட்டார் தேர்வில் பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், இளைஞர்களின் பிரியமான ஓர் தேர்வு என்றால் அது 150 சிசி திறன் கொண்டதாக மட்டுமே இருக்கும்.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V)

அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட பைக்காக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி இருக்கின்றது. இந்த பைக் தற்போது ரூ. 1.11 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக்கில் 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, 4 வால்வு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 17.39 பிஎச்பி பவரையும், 14.73 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இப்பைக்கில் மிக அதிக தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

அந்தவகையில், எல்இடி டிஆர்எல், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. அர்பன், ஸ்போர்ட் மற்றும் மழை ஆகிய என்ற ரைடிங் மோட்களே வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோன்னக்ட் இணைப்பு அம்சம் மற்றும் அட்ஜஸ்டபிள் க்ளட்ச் மற்றும் ஃபிரண்ட் பிரேக் லிவர் உள்ளிட்டவை இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Hero Xtreme 160R)

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கும் தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இந்த பைக் நாட்டில் ரூ. 1.14 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக்கில் 163 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதே பைக் மாடலில் எக்ஸ்டெக் எனும் வேரியண்ட் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. இதில் சிறப்பு வசதியாக முழு டிஜிட்டல் கன்சோல் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்படுகின்றது.

தினமும் டூ-வீலரை பயன்படுத்துறவங்களுக்கு ஏத்த பைக்குகளின் லிஸ்ட்!.. எல்லாத்தோட விலையும் ரொம்ப கம்மி!

யமஹா எஃப்இசட் எஸ் (Yamaha FZ S)

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பைக்குகளில் எஃப்இசட் எஸ் மாடலும் ஒன்று. எனவேதான் இந்த பைக் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் காட்சியளிக்கின்றது. மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக்காக அது காட்சியளிக்கின்றது. இதில், 149 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 12.2 பிஎச்பி பவரையும், 13.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த பைக்கில் எல்இடி இலுமினேஷன், ப்ளூடூத் இணைப்பு, முழு டிஜிட்டல் எல்சிடி கன்சோல் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top five most affordable 150 cc to 160 cc bikes list in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X