நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

டோர்க் க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் பண்டிகை காலத்தை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த எலக்ட்ரிக் பைக் குறித்தும் விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களான க்ராடோஸ் மற்றும் க்ராடோஸ் ஆர் -இன் டெலிவிரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. கடந்த ஜூலையில் முதற்கட்டமாக புனேவில் டெலிவிரிகள் துவங்கியதை அடுத்து தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவிரிகள் மும்பையில் துவங்கப்பட்டுள்ளன.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

இதன் பின்னர் மற்ற முக்கிய இந்திய நகரங்களில் டெலிவிரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புனேவில் உள்ள டோர்க் மோட்டார்ஸின் தலைமையகத்தில் இருந்து நேரடியாக பைக்குகள் டெலிவிரி செய்யப்படுகின்றன.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டெலிவிரிக்காக வாடிக்கையாளர் எந்தவொரு ஷோரூமிற்கும் செல்ல வேண்டாம். நேரடியாக புனேவில் இருந்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டோர்ஸ்டெப் முறையில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி செய்யப்படுகின்றன.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

டெலிவிரிகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து டோர்க் மோட்டார்ஸின் நிறுவனரும், சிஇஓ-வுமான கபில் ஷெல்கே அளித்த பேட்டியில், "மும்பையில் உள்ள எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எங்களின் அதிநவீன தயாரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

இதன் மூலம், புனேவை தாண்டி புதிய பகுதிகளுக்கு எங்கள் வரம்பை விரிவுப்படுத்தியுள்ளோம். மேலும், எங்களின் சக்கான் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருவதால், பைக்குகளின் வெளியீட்டின்போது அறிவிக்கப்பட்டபடி, பல நகரங்களுக்கு எங்கள் கவனத்தை கொண்டு செல்வோம்" என்றார்.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் க்ராடோஸ் மற்றும் க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் க்ராடோஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,22,499 ஆகவும், க்ராடோஸ் ஆர் மாடலின் விலை ரூ.1,37,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

விலை குறைவான க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்கை வெள்ளை நிறத்தில் மட்டுமே பெற முடியும். ஆனால் க்ராடோஸ் ஆர் மோட்டார்சைக்கிளை வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு என 4 விதமான நிறத்தேர்வுகளில் ஒன்றில் தேர்வு செய்யலாம். ஆனால் இதில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவிரிகள் மட்டுமே தற்போது துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

க்ராடோஸ் ஆர் பைக்கை சிவப்பு நிறத்தில் முன்பதிவு செய்த மும்பை வாடிக்கையாளர்களுக்கு பைக் அடுத்த நவம்பர் மாதத்தில் டெலிவிரி செய்யப்பட உள்ளதாம். இயக்க ஆற்றலை வழங்கும் பவர்ட்ரெயினை பொறுத்தவரையில், இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

இரண்டிலும் ஒரே மாதிரியான 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரியும், ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இவற்றின் மூலமாக க்ராடோஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 7.5 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே பெற முடியும். ஆனால் க்ராடோஸ் ஆர் வேரியண்ட் அதிகப்பட்சமாக 9 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 38 என்எம் டார்க் திறன் ஆற்றலில் இயங்கக்கூடியது.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். ஃபாஸ்ட் சார்ஜரை உபயோகித்து க்ராடோஸ் ஆர் பைக்கில் பேட்டரியை வெறும் 1 மணிநேரத்தில் 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும் என்கிறது டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம்.

நாம் எதிர்பார்த்த எலக்ட்ரிக் பைக்கிற்கு டெலிவிரி துவங்கியாச்சு!! அப்புறம் என்ன... புக் பண்ண வேண்டியதுதான

அதுவே வீட்டு உபயோக மின்சாரத்தில் இந்த அளவிற்கு சார்ஜ் நிரப்ப 4இல் இருந்து 5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். டோர்க் எலக்ட்ரிக் பைக்குகளில் முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாக, முழு டிஜிட்டல் டேஸ்போர்டு, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், முன்பக்க ஸ்டோரேஜ் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. க்ராடோஸ் ஆர் பைக் கூடுதலாக ஜியோஃபென்சிங், க்ராஷ் அலார்ட் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் அனாலிஸிஸ் உள்ளிட்ட வசதிகளை பெறுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 22, 2022, 14:27 [IST]
English summary
Tork kratos and kratos r delivery begins in mumbai features range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+