பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

சூப்பரான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

டார்க் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் (Tork Kratos Electric Motorcycle) உற்பத்தி பணிகளை டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) நிறுவனம் தொடங்கியுள்ளது. அத்துடன் புதிய மைக்ரோ-உற்பத்தி ஆலையை அமைப்பது தொடர்பான தனது திட்டங்களையும் டார்க் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

நடப்பு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் டார்க் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆரம்பத்தில் புனே நகரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்வதில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

புனே தவிர, சென்னை, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத் மற்றும் டெல்லி போன்ற இந்தியாவின் மற்ற முன்னணி நகரங்களிலும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை விற்பனை செய்யவுள்ளது. ஆனால் இந்த நகரங்களில், நடப்பாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோதான் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

டார்க் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டாண்டர்டு டார்க் க்ரட்டோஸ் மோட்டார்சைக்கிளின் விலை 1.07 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது புனே எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் க்ரட்டோஸ் ஆர் என்ற வேரியண்ட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

இதன் விலை 1.22 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் புனே எக்ஸ் ஷோரூம் விலையாகும். டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் ஒவ்வொரு மாதமும் 500 க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. டார்க் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில், 7.5kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

அத்துடன் இந்த வேரியண்ட்டில், 4kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டார்க் க்ரட்டோஸ் ஆர் வேரியண்ட்டில், 9kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டாரை பெற்றிருந்தாலும் கூட, டார்க் க்ரட்டோஸ் ஆர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிலும், 4kWh பேட்டரி தொகுப்புதான் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

டார்க் க்ரட்டோஸ் ஆர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டி விடும் என டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் ஆகும். இது ஸ்டாண்டர்டு க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை விட 0.5 வினாடிகள் விரைவானது மற்றும் மணிக்கு 20 கிலோ மீட்டர்கள் வேகமானது.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

அதே நேரத்தில் டார்க் க்ரட்டோஸ் மற்றும் டார்க் க்ரட்டோஸ் ஆர் ஆகிய இரண்டு வேரியண்ட்களின் பேட்டரியையும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசி சார்ஜர் பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

டார்க் க்ரட்டோஸ் மற்றும் க்ரட்டோஸ் ஆர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே, ரைடு மோடுகள், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு, டார்க் க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது சவாலான விலை நிர்ணயமாகவே கருதப்படுகிறது. பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களை போல், இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இயக்குவதற்கு அதிகமாக செலவாகாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

பெட்ரோல் செலவு மிச்சம்... சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி தொடங்கியது... இந்த விலைக்கு டபுள் ஓகே!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. இருப்பினும் டார்க் க்ரட்டோஸ் போன்ற ஒரு சில எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் தற்போது தொடர்ச்சியாக அறிமுகமாக தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய சந்தையில் இதுபோன்ற நிறைய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை நாம் காண முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2022, 20:13 [IST]
English summary
Tork kratos electric motorcycle production begins in india check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+