புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்! காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்

டிரையம்ப் (Triumph), நிறுவனம் அதன் இரு காஸ்ட்லியான புதுமுக மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனங்கள் குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் (Triumph), ஸ்பீடு ட்வின் 900 (Speed Twin 900) மற்றும் ஸ்கிராம்ப்ளர் 900 (Scrambler 900) ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இவை 2023 மாடல் ஆகும். எர்ஸ்ட்வைல் ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்குகளின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே இவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இதில், ஸ்பீடு ட்வின் 900 மாடலுக்கு ரூ. 8.35 லட்சம் விலையும், ஸ்கிராம்ப்ளர் 900 மாடலுக்கு ரூ. 9.45 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இரு இருசக்கர வாகனங்களும் இந்தியாவின் பிரீமியம் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் பொருட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இந்த இரு இருசக்கர வாகனங்களையும் வெறும் ரீபேட்ஜ் செய்து மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. அவற்றில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களையும் நிறுவனம் செய்திருக்கின்றது. இத்துடன், புதிய நிற வேலைப்பாட்டையும் நிறுவனம் செய்திருக்கின்றது. மேலும், புதிய கிராஃபிக்குகளாலும் பைக்குகளை டிரையம்ப் அலங்கரித்திருக்கின்றது.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

ஆகையால், இவ்விரு ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்களும் அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. புதிய ஸ்பீடு ட்வின் 900 மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரையம்ப் ஜெட் பிளாக் (Triumph Jet Black), மேட் அயர்ன்ஸ்டோன் (Matt Ironstone) மற்றும் புதிய மேட் சில்வர் ஐஸ் (Matt Silver Ice) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இத்துடன், இந்த பைக் மஞ்சள் நிற அக்செண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. இதுதவிர, பைக்கின் சில பகுதிகளில் கருப்பு நிறத்தையும் டிரையம்ப் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்நிறம் பைக்கின் முன் மற்றும் பின் பக்க மட்குவார்டுகளில் காட்சியளிக்கின்றது. இவற்றுடன் ஜெட் பிளாக் நிறத்தில் சைடு பேனல்கள்அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றன.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இத்தகைய வேலைப்பாட்டால் புதிய ஸ்பீடு ட்வின் 900 மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கைப் போலவே இதனுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்கிராம்ப்ளர் 900 பைக்கும் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரையம்ப் ஜெட் பிளாக் (Triumph Jet Black), கார்னிவர் ரெட் (Carnival Red) and ஜெட் பிளாக் பிளஸ் (Jet Black plus a Matt Khak) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

நிறம் மற்றும் ஸ்டைலில் பல விதமான மாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த பைக்குகள் மோட்டாரைப் பொருத்தவரை ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. அதாவது இரு பைக்குகளிலும் 900 சிசி லிக்யூடு கூல்டு, 8 வால்வு, சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட், 270 டிகிரி கிராங்க் ஆங்கிள், பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 64.1 பிஎச்பி பவரையும், 80 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. செயின் டிரைவ் அம்சம் கொண்ட இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு பைக்குகளையும் ட்யூப்ளர் ஸ்டீல் ட்வின் க்ரேடில் ஃப்ரேமால் டிரையம்ப் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக 41 மிமீ கேர்ட்ரிட்ஜ் ஃபோர்க் பின் பக்கத்திலும், ட்வின் ஷாக் - ட்வின் சைடட் ஸ்விங்கார்ம் முன் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 310 மிமீ டிஸ்க் - பிரெம்போ 4 பிஸ்டன் காலிபர்கள் முன் பக்கத்திலும், 255 மிமீ டிஸ்க் மற்றும் நிஸ்ஸின் 2 பிஸ்டன் காலிபர்கள் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

ஸ்பீடு ட்வின் 900 மோட்டார்சைக்கிளைப் பொருத்தவரை அலாய் வீல் செட்-அப்பையே பெற்றிருக்கின்றது. 18 மற்றும் 17 அங்குல அலாய் வீல்களே பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வீல்களில் ஸ்போர்ட்ஸ் இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 100/90-18 அளவுள்ள டயர் முன்பக்கத்திலும், 150/17-R70 அளவுள்ள டயர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

அதேவேலையில், ஸ்கிராம்ப்ளர் 900 பைக்கில் ஆஃப்-ரோடுகளைச் சமாளிக்கும் பொருட்டு முன் பக்கத்தில் 19 அங்குல வீல் மற்றும் 100/90-19 டயரும், பின் பக்கத்தில் 17 அங்குல வீல் மற்றும் 150/70-17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே டிரையம்பின் இரு மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

புதுசா விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைவிட விலை அதிகம்... காஸ்ட்லியான இரு புதுமுக டிரையம்ப் பைக்குகள் அறிமுகம்!

இந்த பிரீமியம் அம்சங்களை பைக் தாங்கியிருப்பதனாலேயே அண்மையில் விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸாவைக் காட்டிலும் அதிக விலையை அவைக் கொண்டிருக்கின்றன. புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இந்தியாவில் ரூ. 7.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 21:02 [IST]
English summary
Triumph launched speed twin 900 and scrambler 900 bikes in india
மேலும்... #டிரையம்ப் #triumph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+