புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 (Triumph Tiger Sport 660) மோட்டார்சைக்கிள் ரூ.8.95 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிளை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தொலைத்தூர பயணங்களுக்கான மினி-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாக டைகர் ஸ்போர்ட் 660 விளங்குகிறது. அதாவது பந்தய களத்திற்கான பைக்குகளை போன்று அதிகளவில் உடல் பேனல்களை கொண்டில்லாமல், போதுமான அளவை முன்பக்கத்தில் கொண்டதாக இந்த டிரையம்ப் பைக் உள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இது தற்போது இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கில் 660சிசி லிக்யுடு-கூல்டு, 12-வால்வு, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட், இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 10,250 ஆர்பிஎம்-இல் 80 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இரும்பு குழாய் சுற்றளவு சட்டக சேசிஸில் வடிவமைக்கப்படும் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு 150மிமீ டிராவல் உடன் தலைக்கீழான 41மிமீ ஷோவா ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 150மிமீ டிராவல் மற்றும் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி உடன் ஷோவா மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

மேலும் இந்த பைக் இரண்டு பக்கங்களிலும் இரும்பு ஸ்விங்கார்மை கொண்டுள்ளது. முன் சக்கரத்தில் ப்ரேக்கிங் பணிக்கு நிஸின் இரு-பிஸ்டன் காலிபர்களுடன் இரட்டை 310மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் நிஸின் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 255மிமீ டிஸ்க் ப்ரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சக்கரங்கள் 17-இன்ச்சில் அலுமினியத்தால் ஆனவைகளாக உள்ளன.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிளின் நீளம் 2,071மிமீ, அகலம் 834மிமீ மற்றும் வீல்பேஸ் 1,418மிமீ ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பைக்கின் உயரத்தை 1,315மிமீ-இல் இருந்து 1,398மிமீ-க்கு இடையில் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் வழங்கப்படும் டிஜிட்டல் திரையின் பொசிஷன் மாறுப்படும்.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரம் 835மிமீ-க்கும் அதிகமாக உள்ளது. காலி பெட்ரோல் டேங்கில் 206 கிலோ எடை கொண்டதாக உள்ள புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கின் டேங்கில் அதிகப்பட்சமாக 17.2 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் செமி-ஸ்போர்ட் பைக்காக இந்த புதிய டிரையம்ப் பைக் விளங்குகிறது.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

கூர்மையான உடல் பேனல்கள் பைக்கின் இரட்டை-ஹெட்லேம்ப்கள் அமைப்பை சுற்றியே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெட்ரோல் டேங்க் கூடுதல் பேனல்களுடன் பருமனான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி ஆனது பெரிய அளவில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கின் எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

ஏனெனில் வலிமையான இரும்பினால் செய்யப்பட்ட இதன் எக்ஸாஸ்ட் குழாய் ஆனது மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், முன் சக்கரத்திற்கு பின்னால் இருந்து வெளிவரும் எக்ஸாஸ்ட் குழாய் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிக்கு முன்பாகவே முடிவடைந்துள்ளது. பின்பக்கத்தில் பின்-இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான க்ராப் கம்பி பைக்கின் இரு பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

பின்பக்கத்திலும் இரட்டை டெயில்லைட்கள் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டைகர் ஸ்போர்ட் 660-இன் டிஜிட்டல் திரை பகுதி டிஎஃப்டி-ஆகவும், பகுதி எல்இடி யூனிட்டாகவும் உள்ளது. சாலை மற்றும் மழை என்கிற இரு விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோலை பெற்றுவந்துள்ள டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை மொத்தம் 3 விதமான இரட்டை-நிறத்தேர்வுகளில் தேர்வு செய்யலாம்.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 லட்சம்!

லூசர்ன் நீலம்/ சஃபையர் கருப்பு, கிராஃபைட்/ சஃபையர் கருப்பு மற்றும் கோரோசி சிவப்பு/ கிராஃபைட் என்பவை அந்த 3 இரட்டை-நிறத்தேர்வுகளாகும். இந்திய மத்திய-எடை ஸ்போர்ட்ஸ் டூர் மோட்டார்சைக்கிள் பிரிவை தற்சமயம் ஆதிக்கம் செலுத்திவரும் ஜப்பானிய மாடல்களான கவாஸாகி வெர்ஸஸ் 650 மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி என்பவை டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கு போட்டியாக விளங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2022, 16:59 [IST]
English summary
Triumph launched tiger sport 660 in india prices start at rs 8 95 lakh
மேலும்... #டிரையம்ப் #triumph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+