மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் ஹைப்பர்-ஸ்போர்ட்ஸ் சூப்பர்பைக் (Electric Hyper-Sports Super bike) ரக மின்சார மோட்டார்சைக்கிளின் டீசர் படங்களை ட்ரூவ் மோட்டார் (Trouve Motor) நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிதும் ஆவலைத் தூண்டியிருக்கும் இந்த இ-பைக் பற்றிய இன்னும் பல்வேறு முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் தனது ஹைப்பர்-ஸ்போர்ட்ஸ் சூப்பர்பைக் (Electric Hyper-Sports Super bike) ரக இருசக்கர வாகனத்தின் டீசர் படங்களை ட்ரூவ் மோட்டார் (Trouve Motor) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஓர் எலெக்ட்ரிக் பைக்காகும். மின்சார இருசக்கரவாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் ட்ரூவ் மோட்டார் நிறுவனம் டீசர் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

பைக்கின் டீசர் படங்கள் மற்றும் சில முக்கிய விபரங்களை மட்டுமே தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. ஆனால், இதன் பெயர், எப்போது அறிமுகமாக இருக்கின்றது போன்ற துள்ளியமான விபரங்களை ட்ரூவ் மோட்டார் வெளியிடவில்லை. இருப்பினும், நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

ட்ரூவ் மோட்டார் உருவாக்கி வரும் இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு உச்சபட்சமாக 200 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த உச்சபட்ச வேகத்தில் செல்லும் வகையில் இந்தியாவில் எந்தவொரு எலெக்ட்ரிக் பைக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

ஆகையால், இதன் வருகை ஸ்போர்ட்ஸ் இயக்கத்தை விரும்பும் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேநேரத்தில், இந்த பைக்க பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3 செகண்டுகளிலேயே எட்டிவிடுமாம்.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

ஆகையால், ட்ரூவ் மோட்டாரின் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலே கூறிய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக இ-பைக்கில் லிக்யூடு கூல்டு ஏசி இன்டக்சன் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 40 கிலேவாட் வரை பவரை வெளியேற்றக் கூடியது.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

இதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் பைக்கில் ஏஐ தொழில்நுட்பம், லேசர் லைட், எல்இடி தர இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டிஎஃப்டி தொடுதிரை, இணைப்பு அம்சம், ஜிபிஎஸ் நேவிகேஷன், ரியர் டைம் வெயிக்கிள் டயக்னாஸ்டிக், ப்ரெம்போ பிரேக்குகள், இரட்டை சேனல் ஏபிஎஸ், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் என பன்முக நவீன கால அம்சங்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட ஹைப்பர்-ஸ்போர்ட்ஸ் சூப்பர்பைக் ரக எலெக்ட்ரிக் பைக் உருவாக்க பணியிலேயே ட்ரூவ் மோட்டார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இத்துடன் சேர்த்து இன்னும் ஐந்து விதமான மாடல்கள் எலெக்ட்ரிக் பைக்கையும் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

அந்தவகையில், கிளாசிக், கஃபே ரேசர், நேக்கட் ஸ்ட்ரீட், என்டூரோ மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஆகிய ரகங்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை ட்ரூவ் மோட்டார் உருவாக்கி வருகின்றது. இவை ஒன்றன் பின் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வரவிருக்கும் பைக்குகள் ஐஐடி டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள ட்ரூவ் நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி ஆலைகளில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றன.

மூன்றே செகண்டுகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்... விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார சூப்பர் பைக்!

ஹைப்பர்-ஸ்போர்ட்ஸ் சூப்பர்பைக் ரக எலெக்ட்ரிக் பைக்கின் வருகை குறித்து ட்ரூவ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் அருண் சன்னி கூறியதாவது, "சூப்பர் எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தயாரிப்புகள் எலெக்ட்ரிக் வாகன உலகின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நாங்கள் நம்புகிறோம். பன்முக சிறப்பு வசதிகளை இவ்வாகனம் கொண்டுள்ளது. ஆகையால், மிக சுவாரஷ்யமான சவாரி அனுபவம் இதில் கிடைக்கும்" என்றார்.

குறிப்பு: பேட்டரி மற்றும் டயர் படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2022, 18:36 [IST]
English summary
Trouve motor teased its upcoming electric hyper sports superbike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+