ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

புதிய எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்றின் டீசரை ட்ரூவ் மோட்டார் வெளியிட்டுள்ளது. ஹெச்2 என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர் அழைக்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் ஹைப்பர்-மேக்ஸி ஸ்கூட்டர் என ட்ரூவ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என ட்ரூவ் மோட்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பெங்களூரில் உள்ள ட்ரூவ் மோட்டார் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்2 தவிர, மேலும் 2 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ட்ரூவ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 3 எலெக்ட்ரிக் டூவீலர்களும் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதில், ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரின் ஒரு சில டீசர் புகைப்படங்களை ட்ரூவ் மோட்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ட்ரூவ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனரான அருண் சன்னி கூறுகையில், ''கடந்த சில வருடங்களாக இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

2021ம் ஆண்டில் மட்டும் இந்த செக்மெண்ட், திகைப்பூட்டும் வகையில், 132 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022ம் ஆண்டு இதைக்காட்டிலும் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. எங்களது எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதன் மூலம், இந்த வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதுடன், புதுமைகளை புகுத்தி, எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட்டில் புரட்சியை ஏற்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்'' என்றார்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ட்ரூவ் ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரின் சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், 2 பிஸ்டன் காலிபர்களுடனான டிஸ்க் பிரேக்குகள் இந்த எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரின் பிரேக்கிங் பணிகளை கையாளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பொதுவாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், 10 மற்றும் 12 இன்ச் வீல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ட்ரூவ் ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரில், பெரிய 14 இன்ச் வீல்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது ட்ரூவ் ஹெச்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டைலையும் மேம்படுத்தும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 130-230 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என ட்ரூவ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரூவ் மோட்டார் நிறுவனம் ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை வரும் 2023ம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் பைக்குகளை காட்டிலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில், ட்ரூவ் ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ட்ரூவ் ஹெச்2 எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர், என்ன விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரின் விலையை தெரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ஓடும்... விற்பனைக்கு வருகிறது சூப்பரான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக், ஒகினவா, ஆம்பியர், பஜாஜ், சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் ஏத்தர் எனர்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 15, 2022, 23:15 [IST]
English summary
Trouve motor teases h2 electric maxi scooter check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+