டிவிஎஸ் ரசிகர்களே கோவாவுக்குப் போக ரெடியாகுங்க! எதிர்பார்த்த அறிவிப்பு வந்துடுச்சு!
டிவிஎஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவர மோட்டோ சோல் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 2023ம் ஆண்டு நடக்கவுள்ளது. எந்த தேதியில், எந்த இடத்தில் இது நடக்கவுள்ள என்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம் இப்படியாக டிவிஎஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தவும் மோட்டோ சோல் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. 2023ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்போவது உறுதியான நிலையில் இது குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகவுள்ளன.

டிவிஎஸ் நிறுவனம் மோட்டோ சோல் என்ற இந்த நிகழ்ச்சி வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4ம் தேதி கோவா மாநிலத்தில் வைத்து நடத்துகிறது. அங்குள்ள ஹில்டாப் வெகேட்டார் என்ற பகுதியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை டிவிஎஸ் நிறுவனம் "தி அல்டிமேட் பைக்கிங் ஃபெஸ்டிவெல்" என்ற பெயரில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை டிவிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஒரு திறந்தவெளி கிரவுண்டில் நடக்கவுள்ளது. இதில் மோட்டோ கிராஸ் ஃபிட், அப்ஸ்டகிள் ரேஸ், டிரிட் ரேஸ் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனம் பெட்ரோனால் டிவிஎஸ் ரேஸிங் குழுவின் வியக்க வைக்கும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போக இந்த நிகழ்ச்சியில் ஆட்டோமொபைல் விரும்பிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு சர்ப்ரைஸ் ஒன்றும் காத்திருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சில விஷயங்களையும் செய்யவுள்ளனர். இங்கு லிவ்வாக இங்கு நடக்கும் விஷயங்களை வரையும் திறன் படைத்த ஓவியர்கள் வரவுள்ளனர். மேலும் பைக்குளின் 360 டிகிரி கேமாராவை பொருத்தி அதை விரும்பும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் பைக்கில் உலகத்தில் உள்ள பிரபலங்களான இன்ஃப்ளூயன்சர்கள், வாடிக்கையாளர்கள், ஆர்வலர்கள், பிரபல தொழிற்நுட்ப வல்லுநர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அவர்களது வாழ்நாள் அனுபவங்களையும் தொழிற்நுட்ப ரீதியான விஷயங்கள் குறித்தும் பேசவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் பிரபலமான பல கலைஞர்கள் கலந்து கொள்ளும் டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடக்கும் 2 நாட்கள் இரவும் இந்த டிஜே நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் இந்த பாடலுக்கு ஆடி பாடி கொண்டாடவும் வாய்ப்புகள் உள்ளது.
இது போக உச்சபட்சமாக டிவிஎஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் தனது புதிய தயாரிப்புகளை 2023 டிவிஎஸ் மோடோ சோல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு த்ரில்லை ஏற்படும் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. இதே போல நிகழ்ச்சி முழுவதும் டிவிஎஸ் நிறுவனம் தனது பிரிமியம் டூவீலர்களை காட்சிப்படுத்துகிறது.
இந்த மோட்டோ சோல் நிகழ்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஆட்டோமொபைல் நிகழ்ச்சியில் ஒன்றாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். டிவிஎஸ் வாடிக்கையாளர்களை இது உற்சாகப்படுத்துவதோடு புதிய வாடிக்கையாளர்களையும் பெறும் என்பதில் சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இப்பொழுதே தயாராகுங்கள்!


Click it and Unblock the Notifications








