பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இங்கு வரவேற்பு அதிகரித்து கொண்டே உள்ளது. இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் காலடி எடுத்துள்ளன. ஆனால் பெரிய நிறுவனங்களை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் 2 நிறுவனங்கள் மட்டுமே களத்தில் இறங்கியுள்ளன.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், டிவிஎஸ் ஒன்றாகும். தனது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக இந்த செக்மெண்ட்டில் டிவிஎஸ் நிறுவனம் அசத்தி வருகிறது (மற்றொன்று பஜாஜ். இந்த நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து கொண்டுள்ளது). இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 1,420 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 307 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 362.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. வருடாந்திர ரீதியில் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும், மாதாந்திர ரீதியில் பார்த்தால் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை சரிவடைந்துள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதாவது நடப்பாண்டு மார்ச் மாதம் டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 1,799 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் வெறும் 1,420 ஆக குறைந்துள்ளது. எனவே இந்த வகையில் பார்த்தால் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 21.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

சமீப நாட்கள் வரை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் வெறும் 33 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையை 85 ஆக உயர்த்துவதற்கு டிவிஎஸ் நிறுவனம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விற்பனைக்கு கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கையும் உயரலாம்.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் அப்டேட்டும் செய்தது. இதன்படி 2 புதிய வேரியண்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு மற்றும் 'எஸ்' வேரியண்ட்களில், 3.04 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் டாப் மாடலான 'எஸ்டி' வேரியண்ட்டில், பெரிய 4.56 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 145 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 98,564 ரூபாயாக உள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் எஸ் வேரியண்ட்டின் விலை 1,08,690 ரூபாயாக இருக்கிறது. இவை ஃபேம்-2 திட்டத்தின் மானியங்களுக்கு பிறகான விலையாகும். அதே நேரத்தில் 'எஸ்டி' வேரியண்ட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் போட்டியிட்டு வருகிறது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, அது தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டுள்ளது. அதேபோல் பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

பிரம்மாண்ட வளர்ச்சி... விற்பனையில் பட்டைய கௌப்பும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இவை தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. ஒகினவா, ஆம்பியர் போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆர்வமாக மாறி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 30, 2022, 17:53 [IST]
English summary
Tvs iqube registers 363 per cent sales growth in april 2022 details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+