என்ன ஸ்கூட்டர்ல வாய்ஸ் அசிஸ்ட் அம்சமா! ஹோண்டா ஆக்டிவாவிற்கு ஆப்பு வைக்க தரமான வசதியுடன் TVS Jupiter அறிமுகம்!
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு கடுமையா போட்டியை ஏற்படுத்தும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் அதன் ஜுபிடர் ஸ்கூட்டர் மாடலில் புதிய இசட்எக்ஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் (ZX Smartxonnect) எனும் தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள் மற்றும் விலை பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் ஜூபிடர் (Jupiter)-ம் ஒன்று. நாட்டில் மிக சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலிலேயே புதிய இசட்எக்ஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் (ZX Smartxonnect) எனும் தேர்வை டிவிஎஸ் நிறுவனம் இன்று (மார்ச் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் இந்த ஸ்கூட்டரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அதாவது, பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்ட ஸ்கூட்டராக ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் மாடலை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் இணைப்பு வசதி மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை இந்த தேர்வில் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வேறு எந்த 110 சிசி பெட்ரோல் ஸ்கூட்டரிலும் இந்த அம்சத்தை காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 80,973 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு விதமான நிற தேர்வுகளில் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். மேட் பிளாக் மற்றும் காப்பர் பிரவுண் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி முழு டிஜிட்டல் கன்சோல், டர்ன்-பை-டர்ன் வழி நடத்தும் நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் அழைப்பு / எஸ்எஸ்எம் அலர்ட் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

புதிய வேரியண்டின் வருகையால் டிவிஎஸ் ஜுபிடர் தற்போது ஆறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஷூட் மெட்டல் வீல், எஸ்டிவி, இசட்எக்ஸ், கிளாசிக், இசட்எக்ஸ் டிஸ்க் ஐ டச் ஸ்மார்ட் மற்றும் புதிய இசட்எக்ஸ் ஸ்மார்ட் எக்ஸ் கன்னெக்ட் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் என்பது ப்ளூடூத் இணைப்பு தொழில்நுட்பமாகும். இதனை முழுமையாக பயன்படுத்த ஓர் செயலி தேவை. இதனை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றின் வாயிலாக டிவிஎஸ் நிறுவனம் வழங்குகின்றது. இதனைக் கொண்டு செல்போனுடன் இணைக்கையில் பன்முக விஷயங்களை செல்போன் திரை வாயிலாகவே அதன் பயனர்களால் செய்து கொள்ள முடியும்.

இத்தகைய ஓர் அம்சத்துடனேயே ஜுபிடர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப், 2 லிட்டர் ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட குளோவ் பாக்ஸ், 21 லிட்டர் ஸ்டோரேஜ் இருக்கைக்கு அடியில் மற்றும் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 110 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 5.8 கிலோவாட் ஆற்றலையும், 8.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. ப்ளூடூத் இணைப்பு அம்சத்தை முதல் முறையாக 110 சிசி ஸ்கூட்டர் செக்மெண்டில் டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசனே பெற்றது. இதனைத் தொடர்ந்தே தற்போது ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் அம்சம் ஜுபிடர் லைன்-அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ஸ் அசிஸ்ட் அம்சத்தை ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஒயர்லெஸ் ஹெட்போன், ஹெல்மெட், ஒயர்டு ஹெட்போன் மற்றும் செல்போன் ஆகியவற்றால் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதராணமாக, ஒயர்டு ஹெட்போனில் உள்ள அழைப்பை ஏற்கும் பொத்தானை நீண்ட நேரம் அழுத்தினால் கூகுள் அசிஸ்டன்ஸை ஆக்டிவேட் செய்யும்.

இதைப்போலவே, டிவிஎஸ் ஜுபிடர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் வாய்ஸ் அசிஸ்ட் அம்சமும் அதன் பயனர்களுக்காக வேலை செய்ய இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது மட்டுமல்ல அதிக கவர்ச்சியான அம்சங்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில் சில்வர் ஓக் நிற இன்னர் பேனல்கள், ட்யூவல் டோன் இருக்கை, இன்டெல்லிகோ தொழில்நுட்பம் மற்றும் ஐ-டச் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








