புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6வர காத்திருங்க டிவிஎஸ் தரமான சம்பவத்தை செய்ய போகுது!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் வரும் ஜூலை 6 ஆம் தேதி அன்று புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் என்ன மாதிரியான இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்து விரிவாக காணலாம்.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் ஒன்று. இந்நிறுவனம் வரும் ஜூலை 6ம் தேதி அன்று புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனத்தின் கீழ் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக ஜெப்லின் உள்ளது. ஆகையால், இந்த டூ-வீலரையே டிவிஎஸ் வரும் ஜூலை 6ம் தேதி அன்று அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

அதேநேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படும் வாகன மாடல்களில் ஒன்றாக அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆம், இதன் நேக்கட் வெர்ஷனையே டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் அண்மைக் காலங்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

ஆகையால், இந்த இரு பைக்குகளில் எது வேண்டுமானாலும் வரும் ஜூலை 6ம் தேதி அறிமுகமாகலாம் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதாவது, தான் இந்த மாடல் வாகனத்தைதான் வரும் ஜூலை 6ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

எனவே, இந்நிறுவனம் எந்த தயாரிப்பை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பதை வரும் ஜூலை 6ம் தேதி வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பெரும்பாலான தகவல்கள் ஜெப்லினே வரும் ஜூலை 6ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் முதல் முறையாக 2018 ஆம் நடைபெற்று ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இது ஓர் க்ரூஸர் ரக பைக்காகும். இந்த வாகனத்திற்கான வர்த்தக பதிவை ஏற்கனவே நிறுவனம் செய்துவிட்டது. எனவேதான் இந்த பைக்கையே வரும் ஜூலை 6ம் தேதி டிவிஎஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகப்படியானோர் நம்புகின்றனர்.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் தற்போது வரை எந்தவொரு க்ரூஸர் ரக இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இந்த குறையைப் போக்கும் விதமாகவே நிறுவனம் ஜெப்லின் ஆர் பைக்கை விரைவில் இந்திய சந்தயைில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஜெப்லின் பைக்கை உருவாக்கியிருக்கின்றது. இதுவரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த எந்தவொரு க்ரூஸர் பைக்குடன் ஒத்துப்போக தோற்றத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது. 2018 ஆட்டோ ஷோவில் காட்சிக்குள்ளாகிய ஜெப்லின் பைக்கில் ஹெக்ஸோகனல் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், சங்கி ரக யுஎஸ்டி ஃபோர்க் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

இதுதவிர, ரெட்ரோ தோற்றத்தை பைக்கிற்கு வழங்கும் வகையில் ஒயர்-ஸ்போக் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களால் டிவிஎஸ் ஜெப்லின் ஆர் க்ரூஸர் பைக் வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளித்தது. இத்தகைய ஓர் பைக்கையே நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

புதுசா டூ-வீலர் வாங்குற பிளான் போட்டு இருக்கீங்களா? ஜூலை 6 வர காத்திருங்க... புதுமுக வாகனத்தை அறிமுகம் செய்யும் டிவிஎஸ்!

இந்த பைக்கில் 220 சிசி மைல்டு ஹைபிரிட் மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டாரே அப்பாச்சி பைக்குகளில் பயன்படுத்தப்படுகின்றது. அதேநேரத்தில் இந்த பைக்கில் டிவிஎஸ் 312 சிசி எஞ்ஜினைபயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Friday, June 17, 2022, 19:21 [IST]
English summary
Tvs motor company planning to launch a new two wheeler on coming july 6
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+