சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை.... இதை யாருமே எதிர்பாக்கலயே...

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனையை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம்.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2021 ஜூன் மாதவிற்பனை மற்றும் கடந்த மே மாத விற்பனையை ஒப்பிடும் போது விற்பனை வளர்ச்சியைத் தந்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனையில் ஆண்டு ஒப்பீட்டில் வளர்ச்சியையும் மாத ஒப்பீட்டில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

டிவிஎஸ் மோர்ட்டார்ஸ் நிறுவனம் 2 மற்றும் 3 சக்கர வாகன விற்பனையைப் பொருத்தவரை மொத்தம்3,08,501 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு ஜூன் விற்பனையைப் பொருத்தவரை 2,52,886 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 22.48 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த மே மாத விற்பனையைப் பொருத்தவரை மொத்தம் 3,02,982 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதாவது 1.82 சதவீத விற்பனையைப் பெற்றுள்ளது.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

இதில் மோட்டார் சைக்கிள் செக்மெண்டை பொருத்தவரை 1,46,075 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது இதுவே கடந்த ஜூன் 2021 விற்பனையில் 1,46,874 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. ஒட்டு மொத்த விற்பனையில் 799 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 0.54 சதவீத விற்பனை குறைந்துள்ளது. கடந்த மே மாதம் இதே செக்மெண்டில் 1,48,560 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 1.67 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டு மொத்த விற்பனையில் இந்த செக்மெண்ட் 51.75 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

ஸ்கூட்டர் விற்பனையைப் பொருத்தவரை மொத்தம் 1,05,211 வானங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் 53956 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆக இது 94.99 சதவீத வளர்ச்சியாகும். இதுவே மே மாத விற்பனையான 1,00,665 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 4.52 சதவீத வளர்ச்சியாகும்.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டல் மொத்தம் 4,667 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு விற்பனைக்கு வரவில்லை ஆனால் மே மாத விற்பனை வெறும் 2,637 ஆக இருந்தது. ஒரே மாதத்தில் 76.98 சதவீதம் விற்பனை வளர்ந்துள்ளது. இந்த செக்மெண்டில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் உள்ளது. இது போக மொப்பட் விற்பனை 42,429 ஆக இருக்கிறது. இது கடந்த ஜூன் மாத விற்பனையை ஒப்பிடுகையில் 13.87 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மே மாத விற்பனை12.15 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

3 சக்கர வாகன விற்பனையைப் பொருத்தவரை உள்நாட்டில் 962 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதம்227 ஆக இருந்தது. கடந்த மே மாதம் 1,255 ஆக இருந்தது. 3 சக்கர வாகன ஏற்றுமதியில் 13,824 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்தாண்டு ஜூன் மாதம்13,567 வாகனங்களாக 1.89 சதவீத வளர்ச்சியிலிருந்தது. மே மாதம் 14,669 ஆக ஏற்றுமதியிருந்தது. இது 5.76 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே. . .
TVS Motor Jun-22 Jun-21 Growth (%)
Motorcycle 1,46,075 1,46,874 -0.54
Scooter 1,05,211 53,956 94.99
E-Scooter 4,667 0 -
Moped 42,429 37,262 13.87
2W Domestic 1,92,090 1,45,413 32.79
2W Exports 1,00,625 92,679 8.57
2W Total 2,93,715 2,38,092 23.36
3W Domestic 962 227 323.79
3W Exports 13,824 13,567 1.89
3W Total 14,786 13,794 7.19
Domestic (2+3W) 1,94,052 1,45,640 33.24
Exports (2+3W) 1,14,449 1,06,246 7.72
Total (2+3W) 3,08,501 2,51,886 22.48
சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை . . . . இதை யாருமே எதிர்பாக்கலயே . . .

இந்த விற்பனை மற்றும் ஏற்றுமதி விபர பட்டியலில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது டிவிஎஸ் ஐக்யூப் விற்பனை தான். இந்த விற்பனை ஒரே மாதத்தில் 76.98 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS motor sales report June 2022 know full statistics
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X