அங்கயும் இதை பண்ணீட்டாங்க... வங்கதேச இளைஞர்களை குறிவைத்து டிவிஎஸ் செய்த காரியம்... என்னனு தெரியுமா?
வங்கதேச இளைஞர்களை குறிவைத்து, டிவிஎஸ் நிறுவனம் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் நேபாளம் உள்ளிட்ட சந்தைகளை தொடர்ந்து, வங்கதேசத்திலும் தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125 சிசி (TVS Raider 125) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டிவிஎஸ் ரைடர் 125 பைக் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் டிவிஎஸ் ரைடர் 125 பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட உலகின் மற்ற சந்தைகளிலும் கிடைக்கும் டிவிஎஸ் ரைடர் 125 பைக் அப்படியே வங்கதேச சந்தையிலும் விற்பகைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச தொழில் பிரிவு துணை தலைவரான ராகுல் நாயக் கூறுகையில், ''வேகமாக வளர்ந்து வரும் இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றான வங்கதேசத்தில், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிடையகிறோம்'' என்றார். வங்கதேச இளைஞர்களை டிவிஎஸ் ரைடர் 125 பைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டிவிஎஸ் ஆட்டோ வங்கதேச லிமிடெட் நிர்வாக இயக்குனர் எக்ரம் ஹூசைன் கூறுகையில், ''டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மிகச்சிறந்த தயாரிப்புகளுக்கு வங்கதேச மக்கள் எப்போதுமே சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கும் வங்கதேசத்தில் நல்ல வரவேற்பை பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், 124.8 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 12.9 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 11.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் ரைடர் பைக் எட்டி விடும் என டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது.

சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவேதான் இந்தியா உள்பட பல்வேறு சந்தைகளிலும் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை டிவிஎஸ் ரைடர் 125 பைக் பெற்று வருகிறது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்படுகிறது.

அத்துடன் 3வி ஐ-டச் ஸ்டார்ட், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த பைக்கில் இருக்கைக்கு அடியில் இடவசதியும் வழங்கப்படுகிறது. ஸ்ட்ரைக்கிங் ரெட், ப்ளாசிங் ப்ளூ, விக்கெட் ப்ளாக் மற்றும் ஃபயரி யெல்லோ உள்ளிட்ட வண்ண தேர்வுகளில் டிவிஎஸ் ரைடர் 125 பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் 125 மற்றும் ஹோண்டா ஷைன் எஸ்பி உள்ளிட்ட பைக்குகளுடன், டிவிஎஸ் ரைடர் 125 போட்டியிட்டு வருகிறது. டிவிஎஸ் ரைடர் 125 பைக் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக மாறியதற்கு அதன் டிசைனும் முக்கியமான ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் டிவிஎஸ் ரைடர் 125 டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இது 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகவும் சிறப்பாக டிவிஎஸ் ரைடர் 125 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை குறி வைத்தே ரைடர் 125 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் களமிறக்கியுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் ரைடு செய்து முடித்து விட்டோம்.

அப்போது இந்த பைக் பல்வேறு வகைகளில் எங்களை கவர்ந்தது. எனவே வங்கதேச சந்தையிலும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழக்கமான பெட்ரோல் இன்ஜின் டூவீலர்களில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய சந்தையில் ஐ-க்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருகிறது. ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிவிஎஸ் ஐ-க்யூப் போட்டியாக திகழ்கிறது. வரும் காலங்களில் டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








