இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்ஸ் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தமாக 1,67,695 இருசக்கர வாகனங்களை இந்த ஓசூரை சேர்ந்த 2-வீலர் பிராண்ட் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2021 ஜனவரி மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2,05,216 யூனிட்களாக பதிவாகியது.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

இந்த வகையில் பார்க்கும்போது டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 18.28% குறைந்துள்ளது. ஆனால் உண்மையில் கடந்த டிசம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த ஜனவரியில் ஏறக்குறைய 21 ஆயிரம் டிவிஎஸ் 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த மாதத்தில் கிட்டத்தட்ட 14.26% குறைவாக 1,46,763 இருசக்கர வாகனங்களையே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

இதற்கு டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதை முக்கிய காரணமாக சொல்லலாம். கடந்த 2022 ஜனவரியில் உள்நாட்டில் அதிகளவில் விற்பனை செய்யபட்ட டிவிஎஸ் வாகனமாக முதலிடத்தை பிடித்துள்ள ஜூபிட்டர் கடந்த மாதத்தில் மொத்தம் 43,476 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

ஜூபிட்டரின் இந்த விற்பனை எண்ணிக்கை 51,952 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட 2021 ஜனவரியை காட்டிலும் 16.32% குறைவு என்றாலும், கடந்த 2021 டிசம்பரை காட்டிலும் 13.98% அதிகமாகும். ஏனென்றால் கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் 38,142 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களில் 4இல் 1 யூனிட் ஜூபிட்டர் ஸ்கூட்டராகும்.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் கமர்ஷியல் 2-சக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ்.எல் 35,785 யூனிட்களின் விறபனை உடன் உள்ளது. ஆனால் 2021 ஜனவரியில் சுமார் 59 ஆயிரம் யூனிட்களின் விற்பனை உடன் எக்ஸ்.எல் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த வகையில் எக்ஸ்.எல் மினி-பைக்குகளின் விற்பனை 39.35% குறைந்துள்ளது.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்ட எக்ஸ்.எல் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 2,400 யூனிட்கள் அதிகமாகும். மூன்றாவது இடத்தை அப்பாச்சி பைக்குகள் பிடித்துள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 25,925 அப்பாச்சி பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஜனவரியை காட்டிலும் 8.89% குறைவு மற்றும் 2021 டிசம்பரை காட்டிலும் 10.16% அதிகமாகும்.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

டிவிஎஸ்-இன் பிரபலமான ஸ்கூட்டர்களுள் ஒன்றான எண்டார்க் இந்த வரிசையில் 4வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 21,120 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் இதனை காட்டிலும் 23.94% அதிகமாக 27,766 எண்டார்க் ஸ்கூட்டர்களும், 2021 டிசம்பரில் 25.27% குறைவாக 16,859 எண்டார்க் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

இவ்வாறு கடந்த ஜனவரி மாதத்தில் பெரும்பான்மையான டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகள் 2021 ஜனவரியை காட்டிலும் கணிசமாக குறைந்திருந்தாலும், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. எண்டார்க்கிற்கு அடுத்து இந்த வரிசையில் 5வது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் சமீபத்திய அறிமுகமான ரைடர் உள்ளது.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

கடந்த ஆண்டு இரண்டாம் பாதியில் பண்டிகை காலங்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்ட ரைடர் கடந்த மாதத்தில் மொத்தம் 11,377 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில் 10,843 ரைடர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் கடந்த மாதத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைத்துள்ள 2-வீலர்ஸின் எண்ணிக்கை 85,528 ஆகும்.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் டிவிஎஸ் 2-வீலர் எது தெரியுமா? ரைடர் பைக்கிற்கு விற்பனை குவியுது!!

டிவிஎஸ்-இன் இந்த ஏற்றுமதி எண்ணிக்கை 2021 ஜனவரி & டிசம்பர் மாதங்களை காட்டிலும் முறையே 3.12% மற்றும் 0.44% குறைவு. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதத்தில் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலராக ஸ்டார் சிட்டி முதலிடத்தில் உள்ளது. மொத்தமாக 31,366 ஸ்டார் சிட்டி பைக்குகள் கடந்த ஜனவரியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 22, 2022, 11:12 [IST]
English summary
Tvs sales breakup jan 2022 jupiter xl100 in lead
மேலும்... #டிவிஎஸ் #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+