வெற்றிக்கரமாக 3 லட்சத்தை கடந்த டிவிஎஸ்-இன் மார்ச் மாத விற்பனை!! 2021 மார்ச்சில் இதை விட அதிகம்!
தமிழகத்தை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் கடந்த 2022 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்ஸ் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 3,07,954 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இந்த முன்னணி 2-வீலர் பிராண்டின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 14,689 யூனிட்கள், அதாவது 4.55% குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 3,22,643 இருசக்கர வாகனங்கள் டிவிஎஸ் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த 2022 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ்-இன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 9.31% அதிகமாகும். ஏனென்றால் கடந்த பிப்ரவரியில் 2,81,714 யூனிட் வாகனங்களையே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

3,07,954 என்பது கடந்த மார்ச்சில் டிவிஎஸ் மோட்டார் உலகம் முழுவதிலும் விற்பனை செய்த 2-சக்கர & 3-சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இதில் உள்நாட்டு விற்பனை மட்டும் 1,98,230 யூனிட்கள் ஆகும். ஆனால் டிவிஎஸ்-இன் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,03,261 ஆக பதிவாகி இருந்தது. இந்த வகையில் டிவிஎஸ் உள்நாட்டு விற்பனை 2.48% குறைந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை இவ்வாறு இருக்க, கடந்த மாதத்தில் இந்த நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,09,724 யூனிட்களாகும். இதிலிலும் 2-சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, 3-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, டிவிஎஸ் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி எண்ணிக்கையும் 2021 மார்ச் மாதத்தில் கடந்த மாதத்தை காட்டிலும் 8.09% அதிகமாக 1,19,382 யூனிட்களாக பதிவாகி இருந்தது.

உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் 2,92,918 இருசக்கர வாகனங்களை உலகம் முழுவதிலும் கடந்த மாதத்தில் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 மார்ச்சில் இந்த எண்ணிக்கை 4.71% அதிகமாக 3,07,397 யூனிட்களாக பதிவாகியது. டிவிஎஸ்-இன் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 1,96,956 மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் 2-சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 95,962 யூனிட்களாகும்.

ஆனால் 2021 மார்ச்சில் டிவிஎஸ் 2-சக்கர வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருந்தது. பைக்குகளை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1,60,522 பைக்குகளை இந்தியா உள்பட உலகளவில் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2021 மார்ச்சை காட்டிலும் 2.08% அதிகமாகும்.

ஆனால் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் & மொபெட் வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் முறையே 9.34% மற்றும் 17.49% குறைந்துள்ளது. டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட் 2-சக்கர வாகனங்களின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 94,747 மற்றும் 37,649 ஆகும். டிவிஎஸ் மோட்டாரின் கடந்த மாத 3-சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 15,036 ஆகும்.

இது 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் 210 யூனிட்கள், அதாவது 1.38% குறைவாகும். இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 13,762 யூனிட் டிவிஎஸ் 3-சக்கர வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். மீதி வெறும் 1,274 யூனிட்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இதில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்காகவே இந்தியாவில் பெரும்பாலான 3-சக்கர வாகனங்களை டிவிஎஸ் தயாரித்து வருவது தெரிய வருகிறது.

ஆனால் உண்மையில் டிவிஎஸ்-இன் 3-சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2021 மார்ச்சை காட்டிலும் கடந்த மாதத்தில் 15.19%, அதாவது 168 யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் கடந்த 2022 மார்ச்சில் டிவிஎஸ்-இன் விற்பனை பல பிரிவுகளில் குறைந்துள்ளது என்றாலும், 2022 பிப்ரவரியை காட்டிலும் கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








