நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

டிவிஎஸ் நிறுவனம் அதன் புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை நாளை அறிமுகமாக செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நாளைய தினத்தில் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் சமீபத்தில் ரோனின் 225 பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய பைக்கையும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கியிருக்கின்றது.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இதனையே நாளைய தினம் டிவிஎஸ் அறிமுகம் செய்ய இருக்கின்றது. விர்சுவல் நிகழ்வின் வாயிலாகவே நிறுவனம் புதிய தயாரிப்பை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த புதுமுக இருசக்கர வாகனம் அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஆக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. சமீபத்தில்தான் இதன் சோதனை மாடல் இந்திய சாலையில் ஸ்பை செய்யப்பட்டது.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இதில், புதிய எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக சிறந்த திறன் வெளியேற்றத்தைச் செய்ய இருசக்கர வாகனத்திற்கு உதவியாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனம் இந்த இருசக்கர வாகனம்குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆகையால், இருசக்கர வாகனம் பற்றிய துள்ளியமான தகவல்களை எங்களால் வழங்க முடியவில்லை.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

தற்போது இந்திய சந்தையில் 125 சிசி இருசக்கர வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 160 சிசி பிரிவிற்கு சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், தற்போது இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இந்தியாவின் இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே டிவிஎஸ் 160 சிசி பிரிவில் அதன் புதிய களமிறக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்த இருசக்கர வாகனத்திற்கு சற்று அதிகரித்து இருக்கும் என்பதால் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பன்முக நிற தேர்வு, செல்போன் செயலி இணைப்பு மற்றும் பல எதிர்பார்க்கப்படுகின்றன.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை ஸ்கிராம்ப்ளர் பைக்காக மாறியுள்ளது. இந்த பைக் ரூ. 1.49 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிங்கிள் டோன் கலர் காம்பினேஷன் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய ரோனின் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இதுவாகும்.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இதுதவிர இன்னும் சில கூடுதல் தேர்வுகளுடன் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவற்றின் விலை விபரத்தைக் கீழே காணலாம்.

டிவிஎஸ் ரோனின் விலை
Single Tone Single Channel ₹1,49,000
Dual Tone Single Channel ₹1,56,500
Triple Tone Dual Channel ₹1,68,750
நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

பெல்லி பேன் மற்றும் சூப்பரான வெளியேற்றும் வசதிக் கொண்ட எக்சாஸ்ட் ஆகிய அம்சங்களும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. மேலும், பைக்கில் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக மல்டி ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் இரு விதமான நிற பூச்சுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமாக ஸ்மார்ட்எக்ஸோன்னெக்ட் இணைப்பு வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக எண்ணற்ற வசதிகளை பைக்கின் திரையின் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவலை வழங்குதல், ரேஸ் டெலிமேட்ரி, குறைவான எரிபொருள் இருக்கும் எனில் அதுகுறித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், கிராஷ் அலர்ட், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அறியும் வசதி என பல சிறப்புகள் ரோனின் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. 225 சிசி மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது.

நாளை அறிமுகமாகிறது டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம்... சம்பவத்தை செய்ய நம்ம தமிழக நிறுவனம் தயார்!

இந்த மோட்டார் 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும். ரோனின் பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த உச்சபட்ச வேகத்தைக் கட்டுப்டுத்தும் விதமாகவே இப்பைக்கை டிவிஎஸ் நிறுவனம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவத்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2022, 17:43 [IST]
English summary
Tvs to be launch new face two wheeler tomorrow in india
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+