இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவில் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த டாப்-10 பிராண்ட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இம்முறை 3 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 3,11,907 2-வீலர்ஸ் இந்த முன்னணி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 11 சதவீதம் அதிகமாக 3,52,532 ஹீரோ 2-வீலர்ஸ் விற்பனையாகி இருந்தன. முதலிடத்தில் உள்ள ஹீரோவிற்கே இந்த நிலைமை என்றால், இதற்கடுத்துள்ள மற்ற பிராண்ட்களை பற்றி சொல்லவா வேண்டும்.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

பெரும்பான்மையானவை 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. ஆனால் ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா மற்றும் ஆம்பியர் போன்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்ட்கள் சுமார் 200 சதவீதம் வரையில் விற்பனை முன்னேற்றத்தினை கண்டு வருகின்றன. இதில் இருந்து எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை சார்ந்தே இருக்கும் என்பது மீண்டும் உறுதியாகிறது.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

சரி மீண்டும் டாப்-10 2-வீலர்ஸ் பிராண்ட்கள் லிஸ்ட்டிற்கு வருவோம். ஹீரோவிற்கு அடுத்து 2வது இடத்தில் ஜப்பானிய பிராண்டான ஹோண்டா உள்ளது. வழக்கம்போல் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை கைக்கொடுக்க, 2,46,504 என்கிற விற்பனை எண்ணிக்கையை கடந்த மாதத்தில் இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் ஹீரோ மோட்டோகார்பை போல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI)-இன் விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருந்தது.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

இந்த வகையில் HMSI நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் 18% குறைந்துள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் உள்ளது. ஆனால் உண்மையில், டிவிஎஸ்-இன் விற்பனை பெரிய அளவில் சரியவில்லை. 2021 பிப்ரவரியில் 1,67,112 டிவிஎஸ் 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதனை காட்டிலும் 7 சதவீதம் குறைவாக 1,55,040 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

நான்காவது இடத்தை பஜாஜ் 1,08,682 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் 1.20 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பஜாஜ் ஆட்டோ பதிவு செய்திருந்தது. இந்த வகையில் இந்த புனேவை சேர்ந்த 2-வீலர்ஸ் பிராண்டின் விற்பனை 10% குறைந்துள்ளது. இவை நான்கே தற்போதைக்கு இந்தியாவின் டாப்-4 இருசக்கர வாகன பிராண்ட்களாகும். இதற்குக்கீழ் உள்ளவை அனைத்தும் எல்லா மாதங்களிலும் 1 லட்சத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்பவையே.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

ஐந்தாவது இடத்திற்கு டோக்கியோவை தலைமையிடமாக கொண்ட சுஸுகிக்கும், பழமை வாய்ந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்டான ராயல் என்பீல்டிற்கும் இடையே நீண்ட மாதங்களாக போட்டி உள்ளது. இந்த முறை சுஸுகி 44,129 யூனிட்களின் விற்பனை உடன் ஐந்தாவது இடத்தை தனதாக்கியுள்ளது. இருப்பினும், இது இந்த மற்றொரு ஜப்பானிய நிறுவனத்தின் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 8% குறைவாகும்.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

ஆறாவது இடத்தில் உள்ள ராயல் என்பீல்டு கடந்த மாதங்களில் பலமுறை 50 ஆயிரத்திற்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 44,010 மோட்டார்சைக்கிள்களையே இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது சுஸுகியை காட்டிலும் ஏறக்குறைய 100 யூனிட்கள் மட்டுமே குறைவாகும். ராயல் என்பீல்டின் விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 18% குறைந்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

ஹோண்டா, சுஸுகியை தொடர்ந்து இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் மூன்றாவது ஜப்பானிய பிராண்டான யமஹா 2021 பிப்ரவரியை காட்டிலும் 19% குறைவாக 36,384 2-வீலர்ஸை கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இவை தவிர்த்து, பியாஜியோ, கவாஸாகி, டிரையம்ப் போன்ற வேறு சில பெட்ரோல் 2-வீலர்ஸ் தயாரிப்பு நிறுவனங்களும் நம் நாட்டில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் தற்போதைய டாப்-10 2-வீலர் பிராண்ட்ஸ்!! வழக்கம்போல் முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

ஆனால் இவற்றை எல்லாம் முந்திக்கொண்டு இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா & ஆம்பியர் இவி என இவி பிராண்ட்கள் உள்ளன. இதில் அதிகப்பட்சமாக ஹீரோ எலக்ட்ரிக் பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 7,356 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மற்ற இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,923 மற்றும் 4,303 ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2022, 17:01 [IST]
English summary
Two wheeler sales february 2022 usual hero mototcorp dominates
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+