புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

இந்திய சந்தையில் நடந்து முடிந்துள்ள இந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

ஓலா எஸ்1 ஏர்

கடந்த 2021இல் சந்தையில் அறிமுகமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதலாவதாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. அவற்றிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இந்த அக்டோபர் மாதத்தில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலை குறைவானதாக கொண்டுவரப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 101கிமீ வரையில் பயணிக்க முடியும் என ஓலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 85kmph ஆகும்.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

ஹீரோ விடா வி1

இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து வெளிவந்துள்ள முதல் எலக்ட்ரிக் வாகனமே விடா வி1 ஆகும். இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.45 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விடா வி1 பிரோ வேரியண்ட்டின் விலை ரூ.1.59 லட்சமாகும்.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

இவற்றில் 3.9 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டாப்-ஸ்பீடு 80kmph ஆகும். இதில் பாதி வேகத்தை, அதாவது 0-40kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த வகையில் பார்க்கும்போது, ஹீரோ விடா வி1 ஆனது ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை விட வேகமானது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

கீவே எஸ்ஆர்125

சீனாவை சேர்ந்த கீவே நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதிக்க முனைப்புடன் உள்ளது. இதன் வெளிப்பாடாக வெளிவந்ததே எஸ்.ஆர்125 பைக் ஆகும். கீவே பிராண்டில் இருந்து கடந்த சில மாதங்களில் சில மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகியுள்ளன. ஆனால் எஸ்.ஆர்125 பைக் தான் கீவேவை இந்தியாவில் பிரபலமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

ஏனெனில் கீவே பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள பைக்குகளிலேயே எஸ்ஆர்125 தான் விலை குறைவானதாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, பிரபலமான யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கின் ஆஃப்-ரோடு வெர்சனாக எஸ்ஆர்125 பார்க்கப்படுகிறது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

டிவிஎஸ் ரைடர் ஸ்மார்ட்எக்ஸோனெக்ட்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரைடர் மோட்டார்சைக்கிளை கடந்த 2021இல் அறிமுகப்படுத்திய நிலையில், அதன் உயர்நிலை வேரியண்ட் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் வசதி உடன் இந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எக்ஸோனெக்ட் என்பது இணைப்பு வசதி ஆகும்.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

அதாவது, ப்ளூடூத் மூலமாக மொபைல் போனை பைக்குடன் இணைத்து ஒவ்வொரு திருப்பலுக்கும் நாவிகேஷன், வெதர் அப்டேட்கள் உள்பட பல்வேறு விபரங்களை பெறலாம். இந்த மென்பொருள் அப்டேட்டை தவிர்த்து இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

ஸோண்டெஸ் & மோட்டோ மோரினி பைக்குகள்

நடந்து முடிந்துள்ள 2022 அக்டோபர் மாத துவக்கத்தில் இத்தாலி நாட்டு ஸோண்டெஸ் & மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள்கள் தான் மோரினி ஆகும். 350சிசி பைக்குகளான இவற்றில் 350ஆர், 350எக்ஸ், ஜிகே350, 350டி மற்றும் 350டி அட்வென்ச்சர் உள்ளிட்ட மாடல்கள் அடங்குகின்றன.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

இந்த பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.15 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இவை அனைத்திலும் ஒரே மாதிரியான 350சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 38 பிஎஸ் மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்ஸ் பீக்

ஸ்போர்டியான தோற்றம் கொண்ட டுகாட்டியின் புதிய அட்வென்ச்சர் பைக்காக இந்த அக்டோபர் மாதத்தில் களமிறக்கப்பட்டிருப்பதே பைக்ஸ் பீக் ஆகும். இந்த பைக்கில் 1,158சிசி கிராண்டூரிஸ்மோ வி4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புதுசா 2-வீலர் வாங்குறதுக்கு முன் இவற்றை பாருங்க!! எல்லாம் இந்த அக்டோபரில் அறிமுகமானவை...

அதிகப்பட்சமாக 175 பிஎஸ் மற்றும் 125 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இதே என்ஜின் தான் டுகாட்டியின் மற்ற மல்டிஸ்ட்ராடா வி4 பைக்குகளில் வழங்கப்படுகிறது என்றாலும், புதிய பைக்ஸ் பீக் பைக்கின் எடை கிட்டத்தட்ட 4.4 கிலோ வரையில் குறைவு என்பதால், இயக்க ஆற்றலும் 175 பிஎஸ் வரையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 31, 2022, 17:00 [IST]
English summary
Two wheelers launched in this october from ola s1 to ducati multistrada pikes peak
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+