பைக் என்ஜின்களில் இத்தனை வகைகள் இருக்கு!! புதுசா பைக் வாங்குறதுக்கு முன்ன இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!
பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் எரிபொருள் என்ஜின் என்றாலே முற்றிலுமாக வெப்பத்தின் வாயிலாக இயங்கக்கூடியவை ஆகும்.
Recommended Video
ஓர் ஆட்டோமொபைல் என்ஜின் பயன்படுத்த பயன்படுத்த தனது ஆயுட்காலத்தில் மில்லியன் கணக்கில் மீண்டும் மீண்டும் வெப்பத்தை உமிழும்.

ஆனால் இந்த வெப்பம் என்ஜின் அமைப்பில் மற்ற பாகங்களை பாதிக்காத வண்ணம் குளிர்விக்க வேண்டியது அவசியமாகும். இந்த என்ஜின் குளிர்விப்பு செயல்முறைக்கு காற்று, ஆயில் & நீர் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இவை முறையே ஏர்-கூல்டு என்ஜின், ஆயில்-கூல்டு & லிக்யுடு-கூல்டு என்ஜின்கள் எனப்படுகின்றன.

ஏர்-கூல்டு என்ஜின்
இந்த பெயரை பார்த்தவுடனே புரிந்திருக்கும், இத்தகைய என்ஜின்களில் மோட்டாரை குளிர்விக்க காற்று பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சிறிய அளவில் இறக்கைகளை கொண்ட விசிறி ஒன்று என்ஜினிற்கு அருகில் பொருத்தப்படுகிறது. தேவைப்படும் காற்றுக்கு ஏற்ப இந்த விசிறியின் வேகம் இருக்கும்.

மற்ற இரு வகை என்ஜின்களுடன் ஒப்பிடுகையில், ஏர்-கூல்டு என்ஜின் சற்று எடை குறைவானது ஆகும். இதற்கு காரணம் ஏர்-கூல்டு என்ஜின்களில் ரேடியேட்டர் பொருத்தப்படுவதில்லை. இதனால் எடை குறைவது மட்டுமின்றி, இத்தகைய என்ஜினை உருவாக்கும் செலவும் குறைவே.

எனவே தான் இந்தியாவில் விற்பனையாகும் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களில் பெரும்பாலானவை ஏர்-கூல்டு என்ஜினை கொண்டவையாக உள்ளன. இவ்வளவு ஏன், முந்தைய காலங்களில் கார்களில் கூட ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டது. உருவாக்குவது எவ்வளவு எளிமையானதோ அதேபோல் இத்தகைய என்ஜினை பராமரிப்பதும் எளிமையானது ஆகும்.

ஆயில்-கூல்டு என்ஜின்
இதன் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஆயில்-கூல்டு என்ஜின்களை போன்றதே. என்ன ஒன்று... ஆயில்-கூல்டு என்ஜின்களில் கூடுதலாக சிறிய ஆயில்-கூலர் என்ஜினிற்கு வெளிப்பக்கத்தில் பொருத்தப்படுகின்றன. இது என்ஜின் ஆயிலை விரைவாக குளிரூட்ட விசிறியில் இருந்து வெளிவரும் காற்றை மேலும் குளிர்ந்த காற்றாக அனுப்ப உதவுகிறது.

என்ஜினிற்கு வெளிப்பக்கத்தில் பொருத்தப்படும் இந்த ரேடியேட்டர் தன்னை கடந்து செல்லும் என்ஜின் ஆயிலை காற்றின் உதவியுடன் விரைவாக குளிர்படுத்தி என்ஜினிற்கு அனுப்புகிறது. இவ்வாறு கூடுதலாக ஆயில்-கூலர் தொழிற்நுட்பத்தை பெறுவதினால் ஏர்-கூல்டு என்ஜின்களை காட்டிலும் ஆயில்-கூல்டு என்ஜின்கள் நடைமுறைக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.

ஏனெனில், ஏற்கனவே கூறியதுபோல் குளிர்விக்கப்பட்ட ஆயில் தான் என்ஜினிற்குள் செல்வதால், என்ஜின் அமைப்பில் இயங்கி கொண்டே இருக்கும் பாகங்கள் நீண்ட காலத்திற்கு இடையூறுகள் இல்லாமல் இயங்குவதோடு, அவற்றின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.

லிக்யுடு-கூல்டு என்ஜின்
இந்த வகை என்ஜின் தான் தற்சமயம் உலகம் முழுவதிலும் கார்கள், மோட்டார்சைக்கிள்கள், லாரிகள் & ஏடிவி-கள் என அனைத்து பெரும்பான்மையான ஆட்டோமொபைல் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பெயருக்கு இந்த வகை என்ஜின்களில் பிரத்யேகமான திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த திரவத்தை அவ்வப்போது குளிர்படுத்த என்ஜினிற்கு வெளிப்பக்கத்தில் ரேடியேட்டர் பொருத்தப்படுகிறது. குளிர்வான பின் திரவம் ஸ்பெஷல் குடுவை வாயிலாக என்ஜினிற்குள் செல்கிறது. இதன் மூலமாக என்ஜினில் நிலவும் வெப்பம் உறிஞ்சப்படுகிறது. ரேடியேட்டர் மட்டுமின்றி திரவத்தை குளிர்விக்க, விசிறி மற்றும் குழிகள் போன்றவையும் லிக்யுடு-கூல்டு என்ஜின்களில் அங்கம் வகிக்கின்றன.

இந்த அமைப்பின் மூலமாக சிறந்த இயக்க ஆற்றலை பெற முடிவதாக தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த செட்-அப் என்ஜினை எப்போதும் ஒரு விதமான வெப்பநிலையில் வைத்திருப்பதால், லிக்யுடு-கூல்டு என்ஜின்களின் ஆயுட்காலம் மற்ற இரண்டை காட்டிலும் அதிகமாக உள்ளது.

அதேநேரம் லிக்யுடு-கூல்டு என்ஜின்களின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனால் சற்று விலையுயர்ந்த பைக்குகளில் இருந்து மட்டுமே இத்தகைய என்ஜின்களை பார்க்க முடிகிறது. இருப்பதிலேயே குறைந்த விலையில் என்றால், உதாரணத்திற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியா, உலகளவில் வேகமாக இருசக்கர வாகன விற்பனையில் முன்னேறிவரும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் சென்னையில் ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கும் என்ஜின்கள் மிக சிறந்த பைக் என்ஜின்களாக விளங்குகின்றன. குறிப்பாக, ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகள் இந்தியாவின் சிறந்த என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








