சத்தியம் பண்ணல அவ்ளோதான்! ஆனா கட்டாயம் 307கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க.. இந்திய தயாரிப்புதானா!!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் அல்ட்ராவைலட் நிறுவனம் அதன் எஃப்77 (Ultraviolette F77) எலெக்ட்ரிக் பைக்கிற்கு விரைவில் புக்கிங்கை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77) எலெக்ட்ரிக் பைக்கிற்கு வெகு விரைவில் புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் அல்ட்ராவைலட் நிறுவனம் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கிற்கு வரும் அக்டோபர் 23 ஆம் தேதி புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

ரூ. 10 ஆயிரம் முன்தொகையில் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட இருக்கின்றன. புக்கிங்கைத் தொடர்ந்து வரும் நவம்பர் 24ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. முன்னதாக இப்பைக் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ. 3 லட்சம் தொடங்கி ரூ. 3.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

ஆனால், தற்போது பல மடங்கு மின் வாகன உற்பத்திக்கான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக 15 முதல் 18 சதவீதம் வரையிலான விலை உயர்வுடன் அல்ட்ராவைலட் எஃப்77 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக இப்பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

அந்தவகையில், முதலில் தாய் வீடான பெங்களூருவிலேயே முதலில் இ-பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாகவே இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் எஃப்77 விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பைக்கை விற்பனைக்கு ஏற்றுமதி செய்ய அல்ட்ராவைலட் திட்டமிட்டுள்ளது. ஆகையால், இந்த இந்திய தயாரிப்பு உலக நாடுகள் பலவற்றில் வீரநடை போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை எத்தனை வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கும் என்பது பற்றிய விபரத்தை அறிவிக்கவில்லை. அதேவேலையில், இதன் உயர்நிலை வேரியண்ட் ஓர் ஃபுல் சார்ஜில் 307 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. இது அண்மையில் விற்பனைக்கு வந்த டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி-யை காட்டிலும் அதிக மைலேஜ் திறன் ஆகும்.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான இது ரூ. 8.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை என்றவுடன் அல்ட்ராவைலட் எஃப்77-இன் விலையை பற்றி அறிய நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றோம். ஆனால், நிறுவனம் இதுவரை இந்த மின்சார பைக்கின் விலையை பற்றி அறிவிக்கவில்லை.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

வரும் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வின்போதே இருசக்கர வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த பைக்கின் உருவாக்கத்தை பன்மடங்கு மேம்படுத்தியிருக்கின்றது. ஆகையால், முன்பு அறிமுகம் செய்யப்பட்ட வெர்ஷனைக் காட்டிலும் புதியது 30 சதவீதம் வரை எடைக் குறைவானதாகக் காட்சியளிக்கின்றது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

அதேவேலையில், அதிக தரம் மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மிக உயரிய ரக தொழில்நுட்ப கருவிகளே இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மிக சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் கம்ஃபோர்டான ரைடிங் அனுபவம் ஆகியவற்றை இந்த இ-பைக்கில் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஏற்கனவே 70 ஆயிரம் ப்ரீ லான்ச் புக்கிங் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, 190க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இப்பைக்கிற்கு விருப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதாவது, பல வெளிநாட்டினர் இந்த பைக்கை தங்கள் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

சத்தியம் பண்ணல அவ்ளோதான்... ஆனா கட்டாயம் 307 கிமீ பயணிக்கும்னு உத்தரவாதம் தந்திருக்காங்க... அசத்தும் இந்திய தயாரிப்பு!

இத்தகைய பைக்கிற்கே விரைவில் அல்ட்ராவைலட் நிறுவனம் புக்கிங்கைத் தொடங்க இருக்கின்றது. அல்ட்ராவைலட் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்து. நிறுவனம் இந்த மின்சார பைக்கை கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெளியீடு செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இப்போது விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 18, 2022, 20:26 [IST]
English summary
Ultraviolette f77 e bike battery and booking details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+