மிகவும் குறைவான விலையில் புதுசா ஒரு ராயல் என்பீல்டு பைக் வருது... எல்லாரும் ஷோரூமுக்கு படையெடுக்க போறாங்க!
மிகவும் குறைவான விலையில் ஹண்டர் 350 உள்பட 2 புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் வலிமையாக உள்ளது. இந்த செக்மெண்ட்டில் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ளும் வகையில், 2 புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 புதிய பைக்குகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 (New Royal Enfield Bullet 350) ஆகியவைதான் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2 புதிய 350 சிசி பைக்குகள் ஆகும். இந்த பைக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350
புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே இந்த பைக் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது இன்னும் சில நாட்களில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349.34 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இந்த புதிய பைக்கின் நீளம் 2,055 மிமீ ஆகவும், அகலம் 800 மிமீ ஆகவும், உயரம் 1,055 மிமீ ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த பைக்கின் வீல் பேஸ் நீளம் 1,370 மிமீ ஆக இருக்கலாம். இந்த பைக்கின் முன் பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் உடன் சிங்கிள்-சேனல் மற்றும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குடன் ஒப்பிடும்போது, சிறிய ஸ்விங் ஆர்ம், புதிய எரிபொருள் டேங்க் மற்றும் சிங்கிள்-பீஸ் சீட் ஆகியவற்றை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பெற்றிருக்கலாம். அத்துடன் டெயில் லைட் மற்றும் க்ராப் ரெயில் ஆகியவற்றின் டிசைனும் வித்தியாசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விலையை பொறுத்தவரையில், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக மலிவான பைக்காக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளின் அதே புதிய 'J' சீரிஸ் பிளாட்பார்ம்மின் அடிப்படையில்தான், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கும் உருவாக்கப்படுகிறது. வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ ரியர் வியூ மிரர்கள் மற்றும் வட்ட வடிவ இன்டிகேட்டர்கள் ஆகிய டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலில் தக்க வைக்கப்படலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளில் உள்ள அதே 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்தான், புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய தலைமுறை புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாங்கள் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே கூறியதை போல், இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சிபி350 (Honda CB350) போன்ற பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாகதான் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், மிகவும் குறைவான விலையில் ஹண்டர் 350 மற்றும் புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் ஆகிய 2 புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதால், 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கை இன்னும் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








