அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை பற்றிய புதிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அதன்படி, புதிய தலைமுறை ஹிமாலயன், புதிய கிளாசிக் 350, ஸ்க்ராம் 411 என வரிசைக்கட்டி ராயல் என்பீல்டு பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

இதனால், இந்த வரிசையில் அடுத்ததாக எந்த புதிய ராயல் என்பீல்டு பைக் களமிறங்கவுள்ளது என்கிற ஆர்வம் நம்மை தொற்றிக்கொண்டுள்ளது. ஏனெனில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஏகப்பட்ட புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களையும், புதிய தலைமுறை புல்லட் 350 மற்றும் முற்றிலும் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளையும் கடந்த பல மாதங்களாக சோதனை செய்து வருகிறது.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அடுத்ததாக ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து வெளியிடப்படவுள்ள மோட்டார்சைக்கிள் என்று பார்த்தால் அது ஹண்டர் 350 ஆக தான் இருக்கும். ஏனென்றால் ஹண்டர் 350 பைக்கை கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாக சோதனை ஓட்டங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் உட்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புதிய ஹண்டர் 350 பைக் தொடர்பாக இணையத்தில் கசிந்துள்ள அனுமதி சான்றிதழை கீழே காணலாம்.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

இந்த ஆவண படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஒட்டுமொத்த நீளம் 2,055மிமீ, அகலம் 800மிமீ மற்றும் உயரம் 1,055மிமீ ஆகும். வீல்பேஸ், அதாவது இரு சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,370மிமீ ஆக இருக்கும். பைக்கின் மொத்த எடை 360 கிலோ. இந்த விபரங்களின்படி, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை காட்டிலும் புதிய ஹண்டர் 350 ஆனது 85மிமீ நீளம் குறைவானது.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

அதுமட்டுமின்றி, அகலம் மற்றும் உயரத்திலும் மீட்டியோர் மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய ஹண்டர் 350 முறையே 45மிமீ மற்றும் 85மிமீ அளவில் குறைந்ததாக இருக்கும். இதன் காரணமாக இந்த இரு ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இடையே வீல்பேஸும் 30மிமீ வித்தியாசப்படுகிறது. அதுவே கிளாசிக் 350 பைக்குடன் ஒப்பிடுகையில், ஹண்டர் 350 பைக் 90மிமீ நீளம் மற்றும் 35மிமீ உயரம் குறைவானது. ஆனால் 15மிமீ கூடுதல் அகலமானது.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

புதிய ஹண்டர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.1.6 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். ஹண்டர் 350 தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற ரோட்ஸ்டர் பைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்திய சந்தையில் 250சிசி-350சிசி-இல் ஏகப்பட்ட புதிய தொலைத்தூர பயணங்களுக்கான மோட்டார்சைக்கிள்கள் கடந்த சில வருடங்களில் இணைந்துள்ளன. உதாரணத்திற்கு, டிவிஎஸ் மோட்டாரின் சமீபத்திய ரோனின் மாடலை கூறலாம்.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளை போல் புதிய ஹண்டர் 350 மாடலும் இரட்டை தொட்டில் சட்டகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் ஹண்டர் 350 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட உள்ளன.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 349சிசி சிங்கிள்-சிலிண்டர் OHC ஏர் & ஆயில்-கூல்டு என்ஜின் புதிய ஹண்டர் மாடலில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகப்பட்சமாக 20 எச்பி & 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட டிரிப்பர் நாவிகேஷன் இணைப்பு வசதியை இந்த புதிய ரோட்ஸ்டர் பைக்கிலும் எதிர்பார்க்கிறோம்.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

டிரிப்பர் நாவிகேஷன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு திருப்பலுக்குமான வழிக்காட்டுதலை வழங்க செமி-டிஜிட்டல் க்ளஸ்ட்டர் பைக்கின் மைய கன்சோல் பகுதியில் வழங்கப்பட உள்ளது. இந்த செய்தியில் நீங்கள் பார்க்கும் ஹண்டர் 350 பைக்கின் படங்கள் அனைத்தும் அதன் சோதனை ஓட்டம் ஒன்றின்போது எடுக்கப்பட்டவை ஆகும். இந்த ஸ்பை படங்கள் ஏறக்குறைய 1.5 வருடங்கள் பழமையானது.

அளவில்-சிறிய ராயல் என்பீல்டு பைக்காக உருவாகும் ஹண்டர் 350!! புதிய விபரங்கள் இணையத்தில் கசிவு!

அதன்பின் ஹண்டரின் வடிவமைப்பில் ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாற்றங்களை மேற்கொண்டு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு பல மாத சோதனைகளுக்கு பிறகு வெளிவருவதால், தற்போதைய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளை காட்டிலும் இந்திய சாலைகளை புதிய ஹண்டர் 350 பைக் சிறப்பாக கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 16, 2022, 11:42 [IST]
English summary
Upcoming royal enfield hunter 350 specification and power output revealed details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+