முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ! அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க! உலக தர இ-பைக்குகளை வாங்கலாம்!

தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மாலில் வான் மோட்டோ நிறுவனம் திறந்து வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

வான் மோட்டோ (VAAN Moto) எனும் புதுமுக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் அதன் இரு பிரீமியம் இ-பைக்குகளை (எலெக்ட்ரிக் மிதிவண்டிகளை) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களின் அறிமுகத்துடன் சேர்த்து அதன் முதல் வாகன விற்பனையகத்தையும் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஒர்லி எனும் நகரத்தில் அமைந்திருக்கும் அட்ரியா மாலிலேயே ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அர்பன் ஸ்போர்ட் (UrbanSport) மற்றும் அர்பன் ஸ்போர்ட் ப்ரோ (UrbanSport Pro) எனும் இரு புதுமுக மாடல்களையே அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், அர்பன் ஸ்போர்ட் ப்ரோ மாடலை நிறுவனம் லிமிடெட் எடிசனாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

அதாவது குறைவான எண்ணிக்கையிலேயே அதனை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இரு எலெக்ட்ரிக் சைக்கிள்களிலும் 48 வோல்ட் 7.5 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேலையில் இவற்றை ஃபுல்லாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

பேட்டரின் எடை மட்டுமே 2.5 கிலோ என்பது குறிப்பிடத்தகுந்தது. இ-சைக்கிளில் பிரத்யேக தொழில்நுட்ப வசதியாக பவர் அசிஸ்ட் மோட் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், 5 லெவல்கள் கொண்ட எலெக்ட்ரிக் கியர் மற்றும் ஃபுல் த்ரோட்டில் மோட்டில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறன் உள்ளிட்டவையும் இந்த எலெக்ட்ரிக் மிதிவண்டிகளில் வழங்கப்பட்டிருக்கின்றது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

இதுதவிர, ஸ்மார்ட் எல்சிடி திரையும் இ-சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கும். இந்த திரை பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. வான் நிறுவனம் கடந்த இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா மோட்டார்சைக்கிள் (EICMA motorcycle) ஷோவிலேயே இந்த இரு இ-சைக்கிள்களையும் முதல் முறையாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

இரு இ-சைக்கிள்களும் நிறுவனம் பிற முன்னணி மிதிவண்டி உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், பெனெல்லி கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டணியிலேயே அர்பன் ஸ்போர்ட் மற்றும் அர்பன் ஸ்போர்ட் ப்ரோ இ-சைக்கிள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

வான் இ-மொபிலிட்டி நிறுவனம் பிரீமியம் இருசக்கர வாகன பிரிவில் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளும் நோக்கில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயேச தனது முதன் முதல் ஷோரூமை மும்பையில் தற்போது தொடங்கியிருக்கின்றது. இதுதவிர இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் விற்பனையகங்களை திறக்க முடிவு செய்திருக்கின்றது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

அந்தவகையில், நிறுவனத்தின் அடுத்த நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் வான் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையகங்களை திறக்க இருக்கின்றது. நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை கேரளா மாநிலம் கொச்சியில் அமைந்துள்ளது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

இங்கு வைத்தே அதன் தற்போதைய இரு தயாரிப்புகளையும், எதிர்கால தயாரிப்புகளையும் தயாரிக்க இருக்கின்றது. இந்த உற்பத்தி ஆலை மாதத்திற்கு 2 ஆயிரம் யூனிட்டு வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. மேலும், நிறுவனம் ஆண்டிற்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் யூனிட் வரை வாகனங்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல் ஷோரூமை மும்பையில் திறந்த வான் மோட்டோ... அடுத்து சென்னையிலும் திறக்க போறாங்க...

தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் ஆண், பெண் என இரு பாலரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 20 அங்குல வீல்கள், கழட்டி எடுக்கும் வசதிக் கொண்ட பேட்டரி, இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், நார்மல் பெடல், பெடல் அசிஸ்ட் மோட் மற்றும் த்ரோட்டில் மோட் என்கிற மூன்று விதமான மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஆண்-பெண் மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2022, 19:40 [IST]
English summary
Vaan moto launches urbansport and urbansport pro e bike models in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+