பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது.. ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன?

கார்களில் ஒரே ஒரு பிரேக் லிவர் மட்டும் இருக்கும் நிலையில் இருசக்கர வாகனங்களில் மட்டும் ஏன் தனித்தனியாக முன் பிரேக், பின் பிரேக் என இரண்டு பிரேக் லிவர்கள் இருக்கிறது? இது குறித்த விரிவான விளக்கத்தை காணலாம்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

நாம் எல்லோரும் இருசக்கரவாகனம் ஓட்டியிருப்போம், கார்களை ஓட்டியிருப்போம். இந்த இருண்டிற்கும் என்ன வித்தியாசம் என கேட்டால் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இருசக்கர வாகனத்தை விட காரில் உள்ள வசதிகளின் பட்டியலை போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒரு வசதி கார்களில் இல்லை என்றால் நம்ப முடிகிறதா?

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

ஆம் இருசக்கர வாகனத்தில் இருக்கும் ஒரு தொழிற்நுட்ப வசதி காரில் வழங்கப்படவேயில்லை. இது இன்று வெளியாகும் காரில் மட்டுமல்ல கார் கண்டுபிடித்த காலத்திலேயே இப்படி ஒரு வசதியை வழங்காமலேயே இருந்துள்ளனர். இது தான் பிரேக்கிங் சிஸ்டம், அட காருக்கு தான் பிரேக் இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இருசக்கர வாகனத்தில் உள்ளதை போலஇருக்கிறதா? இருசக்கர வாகனங்களில் முன் பிரேக், பின் பிரேக் என இரண்டு விதமான பிரேக்குகள் இருக்கிறது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் இந்த இரண்டும் தனித்தனி பிரேக்குகள் தான். முன் பிரேக்கை பிடித்தால் முன் பக்க வீல் மட்டும் பிரேக் பிடிக்கும், பின் பிரேக்கை பிடித்தால் பின் பக்க வீல் மட்டும் பிரேக் பிடிக்கும். ஆனால் கார்களில்அப்படியல்ல ஒரே ஒரு பிரேக் தான் இருக்கிறது. அந்த பிரேக்கை பிடித்தால் காரின் ஒட்டு மொத்த பிரேக்கிங் சிஸ்டமும் வேலை செய்யும். இப்படியாக இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் ஏன் இரண்டு பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன கார்களுக்கு ஏன் இது வழங்கப்படவில்லை என காணலாம்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

பொதுவாக காருக்கும், இருசக்கர வாகனத்திற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் பேலன்ஸிங்தான். கார் யார் துணையும் இல்லாமல் தனது 4 வீலில் தானாக பேலன்ஸ் செய்து நிற்கும். ஆனால் இருசக்கர வாகனத்தை பொருத்தவரை வாகன ஓட்டியின் பேலன்ஸில் தான் வாகனமே செல்கிறது. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டிகளுக்கு பேனலன்ஸிங்கையும் மனிதில் வைத்து தான் வாகனத்தை டிசைன் செய்ய வேண்டும்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

இருசக்கர வாகனங்களில் தனித்தனியாக பிரேக் வழங்க முக்கியமான காரணம் இது வாகன ஓட்டிகளுக்கு சிறப்பான பேலன்ஸை தருகிறது. இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது, நமக்கு பல நேரங்களில் கிரிப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்படி கிரிப்பை இழந்தால் நாம் கீழே விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி நாம் கீழே விழுவதை தடுப்பது இந்த இரண்டு தனித்தனி பிரேக்கிங் சிஸ்டம் தான்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

நீங்கள் அதிகமாக வழுக்கும், சகதி அல்லது ஆஃப்ரோடில் பயணிக்கும் போது முன் பக்க வீல் பிரேக் பிடித்தால் நீங்கள் கீழே விழுதை தவிர வேறு வழியில்லை. அந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் பின் பிரேக்கை மட்டுமே பிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் பாதுகாப்பாக கீழே விழாமல் அந்த இடத்தை கடக்க முடியும். அடுத்தாக நீங்கள் ஷார்ப்பாக யூ டர்ன் செய்ய வேண்டிய இடத்தில் நீங்கள் முன்பக்க பிரேக்கை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் பின்பக்க பிரேக்கை பயன்படுத்தினால் ஷார்ப் யூடர்ன் எடுக்க முடியாது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

நீங்கள் காரை ஓட்டுவது போல் இருசக்கர வாகனம் கிடையாது. இந்த இரண்டிலும் சூழ்நிலைகள் தளங்கள் வேறு மாதிரியாக இருக்கும். அதனால் இரண்டிற்கும் ஒரே மாதிரியான பிரேக்கிங் சிஸ்டம் சரிவராது இருசக்கர வாகனங்களுக்கு இருண்டு பிரேக்குகள் தனித்தனியாக இருந்தால் தான் அதை சிறப்பாக கண்ட்ரோல் செய்ய முடியும். ஆனால் இது மட்டுமல்ல காரணம் இல்லை. இது போக இன்னும் சில காரணங்களும் இருக்கிறது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

கார்களில் செல்வதை போல இருசக்கர வாகனங்களில் செல்வது பாதுகாப்பானது இல்லை. இருசக்கரவாகனங்களில் ஏர்பேக் கிடையாது, சீட்பெல்ட் கிடையாது. அதனால் பாதுகாப்பு மிகவும் அவசியம், உதாரணமாக பயணத்தின் போது ஒரு பிரேக் திடீரென ஃபெயிலிர் ஆகிவிட்டாலும் உடனடியாக மற்றொரு பிரேக்கை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த முடியும். கார்களில் வேறு பல வழிகள் இருப்பதால் கார்களுக்கு இரண்டு பிரேக் தேவைப்படவில்லை.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

இது போக இருண்டு பிரேக்கையும் ஒரே லிவருடன் இணைத்தால் அந்த பிரேக்கை பிடிப்பதற்கு கடினமாக இருக்கும். இதனால் அவசரமான நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் பிரேக் பிடிக்க முடியாமல் போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் வாகனம் விபத்தில் கூட சிக்கலாம். இதுவும் இரண்டு பிரேக்குககளை தனித்தனியாக வழங்க ஒரு காரணம்

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

இதுமட்டுமல்ல இரண்டு பிரேக்கையும் இணைக்க வேண்டும் என்றால் அதற்காக தனி கருவி உருவாக்க வேண்டும். அது வாகனத்திற்கான விலையை அதிகரிக்கும். வடிவமைப்பை எளிதாக்கவும் இரண்டு பிரேக்குகளை இணைக்கும் முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் ஈடுபடவில்லை. இது போக அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இப்படியாக இரண்டு பிரேக்குகள் இருக்க வேண்டும் என அந்நாட்டு சட்டத்திலேயே இருப்பதால் அதை மீற முடியாது என்பதற்காக இரண்டும் தனித்தனி பிரேக்குகளாக உள்ளது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

ஆனால் இன்று சில ஸ்கூட்டர்களில் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் என்ற ஒரு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதன் படி நீங்கள் முன்பக்க பிரேக்க பிடித்தாலும் சரி பின்பக்க பிரேக்கை பிடித்தாலும் சரி இரண்டு பிரேக்குகளும் ஒரே நேரத்தில் தான் செயல்படும். ஆனால் இந்த வகையான பிரேக்கிங் சிஸ்டம் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு செட் ஆகும். பெரிய பைக்களுக்கு செட் ஆகாது. பைக்களுக்கு கண்டரோல் வேண்டும் என்றால் தனித்தனியான பிரேக்கிங் சிஸ்டம் தான் சிறந்தது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

சரி இனி எந்தெந்த மாதிரியான சூழ்நிலைகளில் முன்பிரேக்கை பிடிக்க வேண்டும் எந்த சூழ்நிலைகளில் பின் பிரேக்கை பிடிக்க வேண்டும் என காணலாம். பொதுவாக இருசக்கரவாகனத்தின் முன்பிரேக் என்பது வாகனத்தை உடனடியாக நிறுத்துவதற்கு பயன்படுகிறது. பின்பிரேக் என்பது வாகனத்தின் வேகத்தை கண்டரோல் செய்வதற்கும் வாகனத்தை திருப்புவதற்கும் பயன்படுகிறது.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

நீங்கள் வேகமாக செல்லும் போது இந்த இரண்டு பிரேக்கையும் நீங்கள் மிக அழுத்தமாகவும் தொடர்ந்தும் பிடிக்க கூடாது. இப்படிசெய்தால் வீல் லாக் ஆகி நீங்கள் செல்லும் பைக் விபத்தில் சிக்க நேரிடும். நீங்கள் வேகமாக செல்லும் போது எந்த பிரேக்கை பிடித்தாலும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் பைக்கின் வேகம் மெல்ல மெல்ல குறைந்து நிற்கும் நிலைக்கு வரும்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

முன்பக்க பிரேக்கை பிடிக்கும் சூழ்நிலைகள்

நீங்கள் மெதுவாக செல்லும் போது உங்கள் வாகனம் எதிரில் செல்லும் வாகனம் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் மோதப்போகும் நிலை அல்லது நீங்கள் உடனடியாக அந்த இடத்திலேயே வாகனத்தை நிறுத்த வேண்டிய நிலை வந்தால் நீங்கள் முன்பக்க பிரேக்கை மட்டும் பிடிக்கலாம். உடனடியாக வாகனம் நின்றுவிடும். மிக கவனமாக இருக்க வேண்டியது நீங்கள் இதை பைக் மெதுவாக செல்லும் போது மட்டும்தான் செய்ய வேண்டும்.

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

பின் பக்க பிரேக்கை பிடிக்கும் சூழ்நிலைகள்

நீங்கள் மிக மெதுவாக கடும் நெருக்கடிக்குள் பயணித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் வாகனத்தை பேலன்ஸ் செய்ய பின்பக்க பிரேக்கை பிடிக்கலாம். வாகனம் மெதுவான வேகத்தில் நகர வேண்டும் அதே நேரம் நிற்கவும் கூடாது என்கிற சூழ்நிலையில் இதை செய்யலாம். ஆனால் இந்த இடத்தில் முன் பிரேக்கை பிடித்தால் உங்கள் பைக்கின் வீல் லாக் ஆகி அந்த இடத்திலேயே நின்று விடுவீர்கள்

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

அதிகமாக ஸ்லிப் ஆகும் சாலைகளில் நீங்கள் பயணிக்கும் போதும் பின்பக்க பிரேக்கை பயன்படுத்தலாம். ஏன் என்றால் முன்பக்க பிரேக் வீலை லாக் செய்யும், அப்படி நடந்தால் வழுகி கீழே விழ வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நீங்கள் இப்படியான ரோடுகளில் செல்லும் போது பின்பக்க பிரேக்கை மட்டுமே பயன்படுத்துங்கள்.இப்படி செய்தால் பைக் வழுவதற்கான வாய்ப்பு குறைவு,

பைக்குக்கு எல்லாம் இரண்டு இருக்குது . . . ஆனா காருக்கு ஒன்னெஒன்னு தான் இருக்குது அது என்ன . . .

ஏபிஎஸ்

இன்று கம்பைன் பிரேக்கிங் முறையில் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வந்துவிட்டது.இது தொழிற்நுட்ப ரீதியில் செயல்பட்டு சரியாக இரண்டு பிரேக்கையும் சேர்ந்து பிடிக்கும். இந்த தொழிற்நுட்பம் உள்ள வாகனங்களில் மேலே உள்ள எதைபற்றியும் சிந்திக்க வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம். ஏபிஎஸ் இல்லாதவாகனங்களுக்கு தான் மேலே உள்ள பிரேக் பிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 29, 2022, 13:26 [IST]
English summary
Why only motorcycle have two brake levers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+