இப்ப வரும் பைக்குகளில் எல்லாம் ஏன் கிக்கர் இல்லை தெரியுமா? இதற்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்குதா?

இன்று வெளியாகும் சில புதிய மாடல் பைக்குகளில் கிக்கரே இல்லாமல் வருகிறது. இதைக் கவனித்திருக்கிறீர்களா? இப்படியாக புதிய பைக்கில் கிக்கர் ஏன் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பைக்கை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தான் இருந்தது. பைக்கில் உள்ள கிக்கரை உதைக்க வேண்டும். அதன் மூலம் இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும். ஆனால் இன்று எளிதாக பைக்கை ஸ்டார்ட் செய்ய செல்ஃப் ஸ்டார்ட்டர்கள் வந்துவிட்டன. இன்று செல்ஃப் ஸ்டார்ட் இல்லாத பைக்கே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு செல்ஃப் ஸ்டார்ட் என்பது பைக்குகளுக்கு ஒரு அத்தியாவசிய விஷயமாகிவிட்டது.

ஆனால் நிலைமை இன்று மாறிவிட்டது. செல்ஃப் ஸ்டார்ட் இருக்கும் சில பைக்குகளில் கிக்கர் இருப்பதில்லை. புதிதாக அறிமுகமாகும் சில விலை உயர்ந்த பைக்குகளில் கிக்கர் இருப்பதில்லை இது ஏன் என்று பலருக்கும் தெரியாது. ஒரு வேலை செல்ஃப் வேலை செய்யவில்லை என்றால் பைக்கை எப்படி ஸ்டார்ட் செய்வது? என்ற சந்தேகம் எல்லாம் பலருக்கு வரும் இப்படியாக இன்று வெளியாகும் சில பைக்குகளில் மட்டும் ஏன் கிக்கர் இருப்பதில்லை என்பதைத் தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.

ஃப்யூயல் இன்ஜெக்டர் பைக்

இன்று வெளியாகும் சில பைக்குககளில் சிக்கர் இருப்பதில்லை இதற்கு இந்த பைக்கில் உள்ள ப்யூயல் இன்ஜெக்டர் ஒரு முக்கியமான காரணம். ஃப்யூயல் இன்ஜெக்டர் உள்ள பைக்குகளில் சப் மிர்சபிள் பம்ப் ஒன்று இருக்கிறது. இந்த பம்ப் ஸ்டார்ட் ஆக வேண்டும் என்றால் 9 வோல்ட் பவர் வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது. ஃப்யூயல் இன்ஜெக்டர் உள்ள பைக்குகளில் கிக்கர் மூலம் ஸ்டார் செய்தால் இந்த பவர் கிடைக்காது. இதனால் கிக்கர் ஒரு தேவையில்லாத கருவியாகத் தான் இருக்கும். அதனால் அதை இந்த ரக பைக்குகளில் வழங்க மாட்டார்கள்.

அட்வான்ஸ்டு செல்ஃப் வசதி

சில பைக்குகளில் செல்ஃப் தொழிற்நுட்பம் அட்வான்ஸ்டு வகையில் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது பேட்டரியிலிருந்து மோட்டார் வரை எந்த நேரத்திலும் பவர் குறையாமல் பைக்கை ஸ்டார் செய்யும் என்ற வகையில் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த பைக்கிலும் ஃப்யூயல் இன்ஜெக்டர் என்பது ஒரு அனாவசியமான ஒன்று தான். அதனால் கூட கிக்கர் வழங்குவதைத் தவிர்த்திருப்பார்கள்.

டிசைன்

சில பைக்குகள் ரேஸிங் பைக் வடிவில் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இப்படியாக டிசைன் செய்யப்படும் போது பைக்கில் கிக்கர் வைக்க டிசைனில் போதுமான இடம் கிடைக்காது. இப்படியான பைக்குகளில் டிசைன்தான் முக்கியமான அம்சம் என்பதால் டிசைனிற்காக கிக்கரை வழங்க வேண்டாம் என அந்த பைக்கை தயாரிக்கும் நிறுவனம் முடிவு செய்திருக்கும். இப்படிச் செய்திருந்தாலும் கிக்கர் இருக்காது.

செலவு குறைவு

சில நிறுவனங்கள் பைக் தயாரிப்பின் போது தயாரிப்பு செலவுகளை மிகவும் குறைக்கப் பல முயற்சிகளைச் செய்வார்கள். தன் போட்டியாளரை விடக் குறைவான விலையில் பைக்கை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். அப்படியாகக் கூட சில நிறுவனங்கள் பைக்கிற்கு கிக்கர் பொருத்துவதால் பைக்கின் தயாரிப்பு செலவு அதிகமாவதாகக் கூறி கூட கிக்கர் இல்லாமல் பைக்கை தயாரிக்கின்றனர்.

இதுதான் தற்போது மார்கெட்டில் வெளியாகும் சில பைக்குகளில் மட்டும் கிக்கர்கள் இல்லாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம். வருகாலத்தில் கிக்கர் என்ற விஷயமே இல்லாத அளவிற்கு தொழிற்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு பைக்குகள் எல்லாம் கிக்கரே இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று கூட எதிர்பார்க்கலாம். கிக்கர் உள்ள பைக்குகள் எல்லாம் மியூசியத்திற்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 18:37 [IST]
English summary
Why some bikes dont have a kick starter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+