இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் ரக எலெக்ட்ரிக் பைக்கிற்கு ப்ரீ-புக்கிங் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

நியூசிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்விட்ச் (Switch) நிறுவனமே உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் ரக எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். உலக அளவில் இந்த ரக இருசக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார ஸ்கிராம்ப்ளர் ரக இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

ஸ்விட்ச் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தை முதன் முதலில் 2020 பிப்ரவரியில் இஸ்கிராம்ப்ளர் எனும் பெயரில் கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தியது. இந்த பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே உற்பத்தி நிலைக்கு இந்த இருசக்கர வாகனம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் விற்பனைக்கும் அது வர இருக்கின்றது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார பைக் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகையை முன்னிட்டு இப்போதே ஸ்விட்ச் நிறுவனம் உலகின் முதல் மின்சார ஸ்கிராம்ப்ளர் பைக்கிற்கான புக்கிங்குகளை தொடங்கியிருக்கின்றது. ப்ரீ-புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

பெரிய அளவில் பேனல்கள், வசவச வென கம்பிகள் (சேஸிஸ்) என எதுவும் இல்லாமல் மிகவும் சிம்பிளான தோற்றத்தில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், அது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. அதிகளவில் பேனல்கள் இல்லாமல் இருப்பது இந்த வாகனத்திற்கு மிக சிறந்த நேக்கட் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

அதேநேரத்தில், முற்றிலும் மாடர்னான தோற்றத்திலும் அந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்தின் விற்பனைக்கான அறிமுகம் பல மாதங்களுக்கு முன்னரே நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இதன் வருகையை இப்போது வரையிலும் நடக்காத வண்ணம் தள்ளி போட வைத்துவிட்டது. ஆனால், விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வருகை அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

ஆகையால், உலக சந்தையில் விரைவில் இதன் கால் தடத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், தள்ளிப்போன இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிறுவனம் பல மடங்கு இஸ்கிராம்ப்ளர் பைக்கை மெருகேற்றியிருக்கின்றது. ஆகையால், இ-பைக் மிகவும் சூப்பரான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இதன் இந்திய வருகை பற்றிய எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. தற்போதே இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், எதிர்காலத்தில் இதன் வருகையை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

இந்த இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 170 கிலோ என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தை முழுக்க முழுக்க அலுமினியம் அலாய் ஃப்ரேமை கொண்டே ஸ்விட்ச் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு வாகனத்தின் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

இந்த வாகனம் அனைத்து கால நிலை மற்றும் நிலப்பரப்பிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்யூவல் டேங்க் போன்று கொடுக்கப்பட்டிருக்கும் அமைப்பிலேயே பைக்கிற்கு தேவையான முக்கிய பாகங்கள் பல மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை தண்ணீரால் பாதிக்காத வண்ணம் உள்ளன.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

பைக்கின் அழகுக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் ஓர் பெல்ட் வாயிலாக நேரடியாக இயக்க அனுபவத்தை பின் வீலுக்கு கடுத்தும் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இரு வீல்களையும் உடனடியாக நிறுத்தும் வகையில் ஜே ஜூவான் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

50 kW ஐபிஎம் எலெக்ட்ரிக் மோட்டாரே ஸ்விட்ச் எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 70 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த மின்சார பைக்கில் 13 kWh LG 21700 லித்தியம் அயன்பேட்டரி பேக்கே பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை விரைவில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதான் உலகின் முதல் ஸ்கிராம்ப்ளர் எலெக்ட்ரிக் பைக்... இது ஒரு ஃபுல் சார்ஜில் எத்தன கிமீ போகும் தெரியுமா?..

ஒரு மணி நேரம் செலவழித்தால் 90 சதவீதம் சார்ஜை ஏற்றி விட முடயுமாம். இந்த இருசக்கரவாகனத்தை சாலை பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக ஸ்விட்ச் உருவாக்கியிருக்கின்றது. இதன் தோற்றத்தை மேலும் பல மடங்கு கவர்ச்சியானதாக மாற்றிக் கொள்ள சில ஆக்ஸசெரீஸ் தேர்வுகளையும் அது வழங்க இருக்கின்றது. அந்தவகையில், தனித்துவமான அமைப்புடைய கண்ணாடிகள், மட்குவார்டுகள், ஸ்கிட் பிளேட்டுகள் போன்றவற்றை ஓர் பேக்கேஜாக அது வழங்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 8:30 [IST]
English summary
World s first electric scrambler bike switch e scrambler full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+