வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

ஹீரோ (Hero MotoCorp) நிறுவனம் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் லட்சக் கணக்கில் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) பார்க்கப்படுகின்றது. இவ்வாறு இந்திய வாகன உலகம் ஹீரோ மோட்டோகார்ப்பைப் பார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நிறுவனத்தின் பிரமாண்ட உற்பத்தி திறன் மற்றும் அதீத விற்பனை வளர்ச்சியே நிறுவனம் பல ஆண்டுகளாக இந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள முக்கிய காரணமாக இருக்கின்றது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் பல லட்சம் யூனிட்டுகள் புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4,54,582 யூனிட்டுகள் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இந்த அதிகபட்ச எண்ணிக்கை நிறுவனத்தின் சந்தை பங்கை உயர்த்தியிருக்கின்றது. மேலும், கடந்த நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் அதிக சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதேவேலையில், இந்த எண்ணிக்கை 2021 அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் பலமடங்கு குறைவு என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

2021 அக்டோபரில் இதே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 547,970 வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதில், 505,957 யூனிட்டுகள் மோட்டார்சைக்கிள்களும், 42,013 யூனிட்டுகள் ஸ்கூட்டர்களும் அடங்கும். ஆனால், நடந்து முடிந்த அக்டோபரில் ஸ்கூட்டர் மற்றும் பைக் இரண்டும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே பெற்றிருக்கின்றன.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

அந்தவகையில், 2022 அக்டோபரில் மோட்டார்சைக்கிள்கள் 419,568 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 35,014 யூனிட்டுகளும் விற்பனையாகியிருக்கின்றன. இதேபோல், இந்த ஒட்டுமொத்த 454,582 யூனிட்டுகளில் 442,825 யூனிட்டுகள் மட்டுமே உள்நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டவை ஆகும். மீதமுள்ள 11,757 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

என்னதான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2021 அக்டோபரைக் காட்டிலும் 2022 அக்டோபரில் குறைவான எண்ணிக்கை விற்பனையைப் பெற்றிருந்தாலும் நிதியாண்டு 2022 உடன் ஒப்பிடுகையில் நடப்பு 2023 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகியிருக்கின்றன. நிறுவனத்தின் டூ-வீலர்கள் இதுவரை 32,72,943 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

கடந்த 2022 நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 30,11,100 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக நிறுவனம் விற்பனையில் சாதனைப் படைத்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த எண்ணிக்கை வருங்காலத்திலும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இதை உயர்த்துகின்ற வகையிலான பணியிலேயே ஹீரோ நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் விடா (Vida) எனும் புதிய பிராண்டின்கீழ் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. வி1 பிளஸ் (Vida V1 Plus) மற்றும் வி1 பிளஸ் ப்ரோ (Vida V1 Pro) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இதில், விடா வி1 பிளஸ் வேரியண்டிற்கு ரூ. 1.45 லட்சமும், விடா வி1 ப்ரோவிற்கு ரூ. 1.59 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வெவ்வேறு திறன் வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது ஹீரோ நிறுவனம்.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

அந்தவகையில், விடா வி1 பிளஸ் வேரியண்டை ஓர் முழு சார்ஜில் 143 கிமீ தூரம் பயணிக்கும் திறன் வழங்கக் கூடிய 3.44 kWh ரிமூவபிள் பேட்டரி பேக்குடனும், விடா வி1 ப்ரோவில் ஓர் ஃபுல் சார்ஜில் 165 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 3.94 kWh பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். இவ்விரு பேட்டரி பேக்கையும் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 65 நிமிடங்களே போதுமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுதவிர கூடுதல் சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவலை வழங்கும் வசதி, ஓடிஏ அப்டேட், இணைப்பு தொழில்நுட்பம், ஃபாலோ மீ ஹோம், எஸ்ஓஎஸ் அலர்ட், ரிவர்ஸ் மோட், பூஸ்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மாதா மாதம் வரலாறு படைக்கும் ஹீரோ மோட்டோகார்ப்... ஆயிர கணக்குல இல்லைங்க லட்ச கணக்குல விற்பனையாகி இருக்கு!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வாரி வழங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு எதிர்காலத்தில் ஹீரோவின் விற்பனை வளர்ச்சிக்கு உதவும் என நம்பப்படுகின்றது. இத்துடன், நிறுவனம் இன்னும் சில புதுமுக தயாரிப்புகளை களமிறக்கவும் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2022, 8:55 [IST]
English summary
World s largest two wheeler manufacturer hero motocorp sold 4 54 582 units in October 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+