அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க! ஏன்னா இதோட விலை மிக அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

ஆர்க் வெஹிக்கிள் (Arc Vehicle) நிறுவனம் தங்களின் ஆர்க் வெக்டர் (Arc Vector) எலெக்ட்ரிக் டெலிவரிக்கு தயாராகி வருவாதக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

ஆர்க் வெக்டர் (Arc Vector) மோட்டார் சைக்கிள் மிக விரைவில் டெலிவரி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரக மின்சார மோட்டார்சைக்கிளாக இது கருதப்படுகின்றது. இது ஓர் மேட்-இன்-இங்கிலாந்து எலெக்ட்ரிக் பைக் ஆகும். ஆர்க் வெஹிக்கிள் (Arc Vehicle) நிறுவனமே இதனை தயாரித்து வருகின்றது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

நிதி பிரச்னை காரணமாக கடந்த காலத்தில் மூடப்பட்டதாக கூறப்பட்ட இந்நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே நிறுவனம் அதன் உலகின் அதிக விலைக் கொண்ட ஆர்க் வெக்டர் எலெக்ட்ரிக் பைக்கை உற்பத்தி செய்யும் பணியைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

இந்த பைக்கிற்கு 90 ஆயிரம் பவுண்ட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக இதன் விலை 91 லட்சம் ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே ஆர்க் வெக்டர் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மிகவும் தனித்துவமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கம் இந்த பைக், உருவத்தைப் போலவே வசதியிலும் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

சிறுத்தை ஒன்று படுத்திருப்பதைப் போன்று மிகவும் கவர்ச்சியான தோற்றம் ஆர்க் வெக்டாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த தோற்றத்திற்காக கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த வாகனம் பிரத்யேக தோற்றம் கொண்ட கஃபே ரேசர் ஸ்டைல் நேக்கட் ரக இருசக்கர வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

இந்த பைக்கே தற்போது டெலிவரிக்கு தயாராகி இருப்பதாக ஆர்க் வெஹிக்கிள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ மற்றும் முன்னணி வடிவமைப்பாளர், மார்க் ட்ரூமன் கூறியதாவது, "எங்களிடம் மிகவும் ஆரோக்கியமான ஆர்டர்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்க் வெக்டர் மோட்டார்சைக்கிள்கள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றது" என்றார்.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

ஆர்க் வெக்டர் இ-பைக்கில் 95 கிலோவாட் (127 bhp) திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். மேலும், இது வெறும் 3.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் சூப்பர் கார்களுக்கே டஃப் கொடுக்கும் அதிக வேக திறனாகும்.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் பைக்கில் 16.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 322 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 45 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

இந்த பைக்குடன் ஓர் பிரத்யேக ஹெல்மெட்டும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஹெல்மெட் ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப் போன்று அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஹெல்மெட்டின் கண்ணாடி ஹெட்-அப் டிஸ்பிளேவாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

இதன் வாயிலாக பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும். அது சாலை மற்றும் சாலையில் உள்ள தடுப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வழங்கும். இது நம்முடைய கண்களை விட மிக சிறப்பாக செயல்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வழித்தடம் மற்றும் எச்சரிக்கை உள்ளிட்டவற்றையும் அதன் பயனர்களுக்கு வழங்கும்.

அம்பானியாவே இருந்தாலும் இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க... ஏன்னா இதோட விலை ரொம்ப அதிகம்! நீங்க நினைக்குறத விட அதிகம்!

ஆர்க் வெக்டர் முதன் முறையாக 2018ம் ஆண்டிலேயே வெளியீடு செய்யப்பட்டது. பின்னர், இதன் உற்பத்தி பணிகள் 2019ம் ஆண்டில் தொடங்கியது. இதன் பின்னரே நிதி நெருக்கடிக்கு நிறுவனம் ஆளாகியது. மேலும், நிறுவனம் திவால்நிலைக்கு தள்ளப்பட்டது. ஆகையால், ஆர்க் வெக்டர் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகள் என அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் அனைத்து பணிகளுக்கும் ஆர்க் வெஹிக்கிள் மறு உயிர் வழங்கி இருக்கின்றது.

Most Read Articles

English summary
Worlds costlies e motorcycle arc vector ready for deliveries
Story first published: Thursday, January 6, 2022, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X