நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா.. எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

யமஹா டிராக் டே அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி நடைபெற இருக்கும் இந்த சிறப்பு நிகழ்வு குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

ஒரு நாள் முதல்வனை போல் ஒரு நாள் ரேஸராக இருக்கக் கூடிய வாய்ப்பை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. நிறுவனம், டிராக் டே எனும் சிறப்பு நிகழ்வை வரும் மார்ச் 13ம் தேதி சென்னையில் நிகழ்த்த இருக்கின்றது.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் டிராக்கிலேயே இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் யார் வேண்டுமானாலும் பங்கேற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அனுமதி இலவசமே. ஆனால், ஒரு நாள் ரேஸராக மாற பதிவு செய்வது முக்கியம்.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

இதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்டுகளை நிறுவனம் ஒதுக்கியிருக்கின்றது. ஆனால், இவற்றை புக் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆம், ஏற்கனவே அனைத்து ஸ்லாட்டுகளையும் இருசக்கர வாகன ரைடகர் புக் செய்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

ஒரு வேலை நீங்கள் இந்த டிராக் டே-வில் பதிவு செய்திருந்தால், ஒரு நாள் ரேஸராக மாட்டுமின்றி, யமஹா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் ஓட்டி பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆம், யமஹா நிறுவனத்தின் இந்த டிராக் நாளின் போது அதன் அனைத்து தயாரிப்புகளையும் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

டிராக் டே-வில் பங்கேற்கும் நபர்களுக்கு மாஸ்க், யமஹா சின்னம் பொருந்திய டி-சர்ட் மற்றும் லேன்யார்ட் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, ரேஸ் டிராக்கில் வாகனத்தை இயக்க இருக்கும் ரேஸர்களுக்கு ரைடிங் கியரை வழங்க இருப்பதாக, யமஹா தெரிவித்துள்ளது. ஆனால், ஷேரிங் அடிப்படையிலேயே இது வழங்கப்படும்.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

ஆகையால், உங்களுக்கான ரைடிங் கியர் உங்களிடத்தில் இருக்கும் எனில் அதை எடுத்து வந்து ரைடிங் அனுபவத்தைப் பெற்றுச் செல்லலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், சொந்த வாகனங்களையும் டிராக்கில் வைத்து இயக்கி பார்க்கும் வாய்ப்பை யமஹா வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

அதேநேரத்தில், யமஹாவின் வாகனங்களை ரேஸ் டிராக்கில் வைத்து இயக்கி பார்க்க, வாகனத்தை இயக்குவதற்கான லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்கள் இருத்தல் அவசியமானது என கூறப்படுகின்றது. ரேஸ் டிராக் நிகழ்வின் போது வாகனத்தை இயக்கி பார்க்கும் அனுபவம் மட்டுமின்றி, தனது சூப்பர் பைக்குளை காட்சிப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீங்களும் ரேஸர் ஆகலாம்... அழைப்பு விடுக்கும் யமஹா... எல்லா வண்டியையும் ஓட்டி பாக்குறதுக்கு ஒரு சூப்பரான சான்ஸ்!

மேலும், போட்டோ எடுத்தல், அக்ஸசெரீஸ் மற்றும் ரைடிங் கியர்கள் காட்சிப்படுத்தல் உள்ளிட்டவற்றையும் அந்த நாளில் யமஹா செய்ய இருக்கின்றது. இத்தகைய பிரத்யேக நிகழ்விற்கே யமஹா அழைப்பு விடுத்துள்ளது. 3.71 கிமீ, 12 திருப்பங்கள் பல சுவாரஷ்யங்களைக் கொண்டதே மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ரேஸ் டிராக் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 8, 2022, 17:47 [IST]
English summary
Yamaha announced trackday event chennai
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+